மதம் என்பது மார்கமா
மானுடத்தின் பிரிவினை தர்கமா
நிதம் நிதமொரு மார்கமா
நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
வரம் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்
பெரியாரின் சீர்திருத்தம்
பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
உதவாத மதங்களை ஒழிக்கலையே
தளர்வோடு நாமிருந்தால்
தரணி சிறக்க வழியில்லையே
மானுடம் என்பதால்
மனமைதிக்கு மதங்கள் வேண்டுமா
காணும் சரித்திரத்தில்
கண்ட புதைகுழிகள் போதாதா
சமணம் அழிந்து
சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினும்
அதுவொரு மாதமாக வளரனுமா
அன்பு அமைதியென
அகிலத்திற்கு போதை தரும்
பின்பு சிறுபான்மை
பெரும்பான்மை எனபேதம் வளர்க்கும்
உயர்வு தாழ்வெல்லாம்
உன்விதி என்றே வகுக்கும்
அயர்வின்றி உழைப்போம்
ஆண்டவனை அறவே ஓழிப்போம்
ஊனம் உள்ளத்திலிருக்க
உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
பெரியார் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவர்குமில்லை
நானும் மனிதனென உரிமைகோரி
வெள்ளி, மார்ச் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
ஊதிப் பெருக்கிய உலகப் பணக்காரனை உருட்டித் தள்ளியது ஹிண்டன்பர்க் ஆய்வு ஆய்வொரு குப்பையென அவர்கள் குதித்தே – இது இந்தியாவின் மீதான வளர்ச்சி...
-
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
ஆரணியில் ஆரம்பித்தது அரகரனின் அச்சு முறி விளையாட்டு ஆட்டத்தில் அரங்கனும் அங்கம் வகிக்க அடுத்து சூடு பிடித்தது அரகரனும் அரங்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக