குலமென்ன, கோத்திரமென்ன
கூடிக் களிக்கையில்
நினைக்கவில்லை
வலமென்ன இடமென்ன
வாதம் செய்கையில்
மதிக்க வில்லை
ஆணென்ன பெண்னென்ன
எல்லாம் மனிதம்தான்
என்றிருக்கையில்
காதலென்றேன்
கைபிடிக்க வேண்டுமென்றேன்
மோதலாகி போச்சு
மதிப்பென்ன மரியாதையென்ன
மாறி மனமுடிப்பின்
மானம்தான் போகுமென்றார்
ஊர் அழைத்து
உற்சவம் நடத்தி
உறவு கொள்ள வேண்டுமாம்
நடத்துங்கள் என்றேன்
நடவதாம் - நான்
மணமகனாயின்
இணையாக சுற்றியத்தை
இகலோகமெல்லாம் பார்த்தபின்
இவர்கள் பார்த்ததால்
பரலோகம் அனுப்ப
பாடை தயார் செய்வதாய்
பரப்புகின்றனர் செய்தியை
கிளை முறித்து
நீரூற்றுவோம்
கிள்ளையை மறவென்று தகவல்
என்னை முறித்து
எங்கு நட்டாலும்
எது வளரும் என்றேன்
முறிந்தபின் உயிரேது
நட்டபின் நட்டமேது
அறிந்துகொள் என்றனர்
அறியாது தவிக்கிறேன்
அவள் நிலை - எனினும்
முறியாது என்றே நினைக்கிறேன்
கூடிவாழ
அன்பு வேண்டும்
கூட வேறேது வேண்டும்
வள்ளுவனும்
அந்தவழி வந்தவனும்
என்றும் உரைப்பது
ஆயினும்
அவரவர் வேண்டுவது
அஃதல்லவே
காதலின் வெற்றி
காதலித்தவளை கைப்பிடிப்பதல்ல
காலமெல்லாம் அவளோடு வாழ்வது
ஆதலின் மனமே
அவளையே நாடு
அந்த செய்தியை அவளிடம் கூறு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
பணம் புகழுக்கு பகீரத பிரயத்தனம் பலகாலம் நிலைத்திருக்குமோ? ஆண்டாண்டு கால அதிகாரம் அப்படியே அடுத்த தலைமுறை தொடரவா? இழப்பதற்கு துணிவில்லை இறப...
-
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...
-
ஷாஜகான் கட்டியக் கல்லறையா சகலரும் எண்ணும் இதய வடிவமா? கட்டி அணைத்து கனன்ற வெப்பத்தை கட்டிலில் தணித்து தொட்டிலில் தாலாட்டுவதா? கணையாழி அணிவித...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக