திங்கள், மார்ச் 8

கச்சி ஏகம்பனே










உன்னை நினையாது
உதவா மாதரைத் தொழுது
தன்னை மறந்ததாக
தவித்தழும் பட்டினச் சித்தருக்கு,

நினைவுட்டு ஏகம்பனே,
நீள்விழி, முலை, யோனியுடைய
மனைவி இல்லையெனில்
மாநிலமும் மகேசனும் ஏதென்று?

நாறும் உடலை
நங்கை மட்டும் கொண்டவளோ?
சேர்ந்த பீளையும்,
சிக்குற்று நாறும் மயிரும்,

பருத்த தொந்தியும்,
புண்ணாம் குழியும் மலமும்—
பாரினில் யாருக்கும் உண்டு,
பட்டினச் சித்தரே, உமக்கும் உண்டு.

இந்திரியச் சேறு சிந்தி
இகலோக வாழ்வு பெற்றவரே,
மந்திரி மனைவி
மாயப்பெண் பிசாசென்று உரைப்பீரோ?

தந்தையின் மனைவி
தாயென அரற்றும் வேடதாரியே,
சிந்தை தெளியும்—
தாயும் பெண்ணென்று அறியும்.


அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...