சாமி என்றாலே ஒரு பொய், அது இந்த ஆசாமிக்கும் பொருந்தும். ஊரெங்கும் ஒரே பேச்சு, பெரும்பான்மையான (ஆண்கள்) மக்கள் சாமியும் மனிதன்தானே என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
ஒவ்வொரு ஆசாமியும் ஒரு வகையோடு அறிமுகம் ஆவர். இவர் நோய் தீர வித்தியாசமான சிகிச்சை – பிரார்த்தனை செய்வதாக அறிமுகம். அதாவது நோய் அல்லது வலி எங்குள்ளதோ அவ்விடத்தில் இவர் கையை வைத்து (Healing touch) பிராத்தனை செய்வார். அதன்மூலம் நோயின் வேகம் குறைவதாக சொல்லப்பட்டது. அவ்வாறு சிஷ்ய கோடிகளும் பயிற்விக்கப்பட்டு நாடு முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டு வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் என் உறவினர் ஒருவரும் ஒரு கிளையை துவங்கினார். அவர் 60 தை கடந்த பெண்மணி, தன் ஆசிரிய உழைப்பால் கிட்டிய அத்தனை பணத்தையும் இக்கிளையை நிறுவ செலவழித்தார்.
அவர் மகன் உட்பட நாங்கள் அப்போதே எதிர்த்தோம் கேட்கவில்லை. ஆனால் அவரின் நம்பிக்கை இப்போது பொய்த்து விட்டது.
ஆம். இந்த தொடர்பு எப்படி ஏற்பட்டது நோயால் பாதிக்கப்பட்ட தன் கணவரின் நலத்திற்காக. ஆனால் அவரை நோய் பறித்து கொண்டது. இதன் மூலம். கடவுள் பக்தி. முதலில் கடவுளை ஒழிக்க வேண்டும் இவர்கள் தானாக ஒழிந்து போவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக