கங்கையைக் காக்க
கார்வண்ணக் கண்ணன்
கலியுகத்தில்
கல்கி அவதாரம் விடுத்துக்
கண்டனன் முன்பெடுத்த
மச்ச அவதாரம்
அந்தோ..........
அசுத்தங்களை அகற்ற
அவதாரமெடுத்தவன்
அழுக்குண்டதால்
ஆயுள் இழந்ததாக
அரற்றிக் கொண்டிருந்தனர்
இழவுச் சொல்ல
இயமத்திற்குச் சென்றேன்
உமையவள்
ஓர் ஓரமிருக்க
சடையப்பன் - மூக்கை
சிந்திக் கொண்டிருந்தான்
ஆகச், செய்தி தெரிந்துவிட்டது
அடியேனுக்கு வேலையில்லை
என நினைத்து
அம்மையப்பரிடம் வினவினேன்
அவரோ
ஆக்ரா வாசிகளின்
அசுத்த நீர்
சடா முடியில் இறங்கியதால்
சகல நறுமணத்தையும்
சகிக்க முடியாமல்
மூக்கைச் சிந்தினாராம்
பெருக்கெடுத்த வெள்ளத்தை
பனித்துளி ஆக்கியவனும்
உயிரியல் தத்துவத்தை
தசாவதாரத்தில்
டார்வினுக்கு முன்
விளக்கியவனும்
மலைத்தும் மாண்டும்
இருக்க
சுற்றுசூழல் வாதிகள்
ஜஹனு முனிவரை
சல்லடை போட்டு
தேடுகின்றனர்
ஏனா?
கமண்டலத்தில்
கங்கையைப் பிடித்து
காதுவழி விட்ட
காலத்தின் பிரதிநிதியாயிற்றே
கமண்டத்தில் பிடித்தவுடன்
கழுவி விட
கானா காணும்
இவர்கள் யாரென்று
இன்னுமாத் தெரியவில்லை
பட்ஜெட் சமர்பித்து
பங்கு ஒதுக்கும்
பகல் கொள்ளையரை
பகல் கனா காணுகின்றனர்
திட்டம் தீட்டி
திங்கள் பலகடந்தும்
தீர்த்தக் கரை
தீட்டுக் கழியவில்லை
ஆம்
சடங்கென்று
சடலத்தை
ஜலசமாதி செய்து
சாதித்தது என்னவோ
காசிக்கு சென்றால்
ஆசை அர்ப்பணம்
சரி
தர்பணக் கழிவுகள்
மாசுக்கு சமர்ப்பணமோ
ஆலைக் கழிவுகளை
ஆற்றில் கலந்து
ஆளை விழுங்கி
ஆபத்தை உணர்த்தியும்
வேளை வரவில்லையென
வெட்டியாய் இருப்பதோ
ஓடையைச் சுத்திகரிக்க
ஓதுக்கிய பணம்
மடை மாற்றியதால்
மாண்டது திட்டம்
மாண்டது திட்டம்தானோ
மாக்களோடு மக்களும்
தாக்கீதுச் செய்தும்
தள்ளுபடிச் செய்கிறது - நீதிமன்றம்
நீதி மறுப்பென்றால்
நிச்சயம் இழப்புகள்
ஆம்
புற்றுநோயால்
கருவில் இருப்பது
கரையலாம்
உருவில் இருப்பதும்
உருகலாம்
தண்ணீர் இறக்குமதிக்கு
தனியாய் ஒப்பந்தம் வரலாம்
தங்கத்தை மதிக்க
யாருமில்லாமல் இருக்கலாம்
என்ன செய்யலாம்
நம்மை வாழ்விக்க
நஞ்சை உருவாக்காமலிருக்க
நம்மை நாம்
திருத்திக் கொள்ளலாம்
அல்லது
நமக்கு நாமே
மரணத் தேதி குறிக்கலாம்
திங்கள், மார்ச் 8
கண்ணன் காப்பானோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சூட்சமம்
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
வளமிக்க வாழ்வில் வசந்தத்தைக் கூட்டவும் தளரும் பருவத்தில் தண்டம் தவிர்க்கவும் இளமையை நீட்டித்து இனியதாய் மாற்றவும் களமிறங்கு காலத்தே காத்தி...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக