திங்கள், மே 25

கோமாதா எங்கள் குலமாதா

 









உழவர்களின்
உபரி வருமானத்திற்கு
உதவிய பசுக்களை,

கோமியம் குடிப்பவர்கள்
கோமாதா” என்று பாதுகாக்க
கோடிகளில் நிதி ஒதுக்கிட,

கொள்கை முடிவெடுத்து
கோரிக்கை வைத்தனர்
குர்பானி கொடுப்பவர்கள்.

குலமாதா தேசிய விலங்கா?
குறிக்கோள் எதுவென்று
குழப்பங்கள் இந்துகளிடையே.

குறும்பாடு உண்டாலே
கொலை செய்யும் நாட்டிலே
கூர்த்த முடிவு நானென்பேன்.

தேவியைத் துதித்து பாடியதை
தேசப் பாடலாய்
தேர்ந்தெடுத்ததைப் போல,

தேசிய விலங்காய்
கோமாதாவை அறிவிக்க
தீருமோ பிரச்சனை?

நந்தனைத் தேடினர்,
நாயன்மாராகி விட்டதால்
கோரோசனை வேண்டாமென்கிறார்.

இந்துகள் வீட்டில்
இருவேளை உணவில்லை;
கோமாதாவும் பட்டினியோடு.

வளர்த்த மாடுகளை
வாங்க ஆளில்லாததால்,
வயிற்றில் ஈரத்துணியோடு
வாழ்க ஜனநாயகம்...


. வேல்முருகன்




கருத்துகள் இல்லை:

புல்டோசர் இந்தியா

  ஆறுகால பூஜையோ , ஐந்துவேளை தொழுகையோ , அவரவர் நம்பிக்கை— அதில் புல்டோசர் ஏன் ? மசூதிகளை இடித்தால் வீதிகளில் தொழுவோமென மார்க்கத்தை நம்...