செவ்வாய், மே 5

ஒழியுமா திராவிடம்?









திக்கற்றவர்களின் ஒளியான
திராவிடம் ஒழிந்ததாய்
திருநாட்டில் ஒரு குதூகலம்.

தீர்ப்புகள் மாறினாலும்,
திராவிடம் இனமா?
தீர்த்து சொல்லும் சித்தாந்தமா?

கவர்ச்சியில் கவிழ்ந்தவர்களை
மதவெறியில் காத்திடுவாரோ—
காத்திருப்போம்.

சிபிஐ, ஈ.டி.யோடு
புல்டோசர், ஜெய் ஸ்ரீராம்
புகுந்திடுமோ?

நீதிபதிகள்
துப்பாக்கியோடு
தீபமேற்றுவார்களோ?

அதிகாரத்தை இழந்தவர்கள்
அனுபவிக்கட்டும் என்றே
அமைதியாய் இருப்பார்களோ?

உணர்வற்று தமிழன்
ஒருபோதும்
ஓய்ந்திருக்க மாட்டான்.

களம் என்பது
அதிகாரம் மட்டுமே அல்ல—
மக்களோடு மக்களாய் இருப்பது. 

அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

ஒழியுமா திராவிடம்?

திக்கற்றவர்களின் ஒளியான திராவிடம் ஒழிந்ததாய் திருநாட்டில் ஒரு குதூகலம். தீர்ப்புகள் மாறினாலும், திராவிடம் இனமா? தீர்த்து சொல்லும் சித்தா...