செவ்வாய், மே 5

அசமத்துவ அகிலம்

 










பேராசை சமூகத்தின்
பெரும் மன்னன்
பேரங்கள் நடத்துவது....

ஈரானை வீழ்த்தவா,
இஸ்ரேலை மகிழ்விக்கவா,
இலாபங்கள் ஈட்டவா?

எண்ணெய் ஆதிக்கத்தில்
ஏறும் விலைவாசி
என்னை பாதிக்குமா?

கொலை, கொள்ளை
குற்றமில்லை என்றோத...
ஐ.நா.வும், அமெரிக்காவுமா?

அகோரப் பசிக்கு
அட்சயப் பாத்திரமாய்
அரசியல் பதவியா?

தேசங்களின் இறையாண்மை...
தீர்மானிப்பது வல்லரசுகளா
பன்னாட்டு நிறுவனங்களா

பேரண்டம் யாரையும்
பேதமாய் பார்க்காதபோது
பேரரசு என்பது மாயையா?

வான் பாதுகாப்பென்பது
வளிமண்டலத்தை
வஞ்சிப்பதா?

செயற்கை நுண்ணறிவில்
தானியங்கி ஏவுகணைகள்—
கற்காலத்தை நோக்கியா?

எல்லோருக்கும் எல்லாம்
என்பது பெருங்கனவா,
ஏற்றத்தாழ்வே நீதியா?

அசமத்துவமே அகிலத்தின்
அடிப்படை கொள்கையா?
அதனை மாற்றதான் முடியமா?

.வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

அசமத்துவ அகிலம்

  பேராசை சமூகத்தின் பெரும் மன்னன் பேரங்கள் நடத்துவது.... ஈரானை வீழ்த்தவா, இஸ்ரேலை மகிழ்விக்கவா, இலாபங்கள் ஈட்டவா? எண்ணெய் ஆதிக்கத்தில் ...