உறவான
என்னவளே,
ஊடுதல்
ஏனடி?
சிறப்பான
வாழ்விலே
சித்தாந்தம்
நீயடி.
அறத்தின்
நிழலிலே
அன்றிலாய்
வாழ்ந்திட,
பறந்து
வந்திடு
பருவத்தில்
பயிர் செய்திட.
உருட்டல்
மிரட்டலில்
உள்ளன்பு
வருவதில்லை,
பொருளின்றிப்
பொருத்தங்கள்
பொதுவில்
நிலைப்பதில்லை.
விருப்பம்
உள்ளதாலே
விண்ணப்பம்
அளித்தேனடி,
ஒருமித்து
வாழ்ந்திட
உன்னருள்
போதுமடி.
பழகும்
பாசாங்கு
பாவை
அறிவாள்;
குழப்பம்
ஏதுமில்லை,
குயுக்திகள்
கொண்டவனே.
உழலும்
மனதை
உன்னிடமே
கொடுத்தேன்;
நிழலும்
நீயென்று
நெஞ்சத்திற்கு
சொன்னேன்.
ஆகட்டும்,
பார்க்கலாம்
ஆசையின்
எல்லையினை;
தாகமும்
தவிப்பும்
தள்ளாடுதா
என்றே.
யூகத்தின்
அடிப்படையில்
யுத்தங்கள்
கூடாதடி;
ஊக்கம்
நீயென்பதால்
உயிரானேன்
உன்னிடமே.
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக