இல்லாத ஒருவன் கல்லாகி
இருக்கு மிடம்செல்ல தடையோ
பொல்லா ஆரிய வேதங்கள்
பொறித்த சூத்திரம் சூத்திரனோ
அல்லாத சாதியில் முடக்கியே
ஆகம விதியால் தாழ்ச்சியோ
கல்லாத கபோதி ஆனதால்
காலகாலமா ஏமாந்து போனாயோ
அவனை காண தடையில்லை
ஆனால் தொடதான் விதியில்லை
தவமே கொண்டாலும் பயனில்லை
தனலால் நந்தனவாய் வியப்பில்லை
கவனம் இனிதான் தேவையே
காவிகள் வரலாற்றில் நீஇந்துவாம்
உவந்து நீயும் செல்வாயே
உடன்பிறப்பை கொல்லத் துணிவாயே
சந்தனம் நீட்டும் சதிகாரன்
சாணிப்பால் அளித்த கயவன்
வந்தனம் கூறும் வக்கிரம்
வாயிலில் தடுக்கும் அக்கிரமம்
இக்கணம் நீவீர் புரிந்திருப்பீர்
இன்னும் ஏனோ உடனிருப்பீர்
தாக்கனும் தகர்த்து ஒழிக்கனும்
தகவமைக்க மாற்றம் வேணும்
2 கருத்துகள்:
7,8 வரிகள் உண்மைகளின் ஆரம்பம்...
தாக்கனும் தகர்த்து ஒழிக்கனும்
தகவமைக்க மாற்றம் வேணும்
உண்மை
உண்மை
கருத்துரையிடுக