சின்னபுள்ள சித்தாளா போகையில
சிந்தை கொஞ்சம் கலங்குதம்மா
என்னகொடுமை படிக்கும் வயதில
எட்டணா கூலிக்கு போகுதம்மா
அன்னமில்லா வறுமை காரணத்தால்
அடிப்படை கல்வியும் கிட்டலியே
என்னவிலை கொடுத்தா இந்தநிலை
எந்தன் நாட்டில் மாறுமம்மா
மத்தபுள்ள படிக்க போகையில
மருகி நிக்கு இந்தபுள்ள
கத்தைபுத்தகம் சுமக்கும் ஆசையில
கனவ வளர்க்கு சின்னபுள்ள
குத்தவாளி யாருயிந்த கொடுமையில
குறைய தீர்க்கவும் சட்டமில்ல
வெத்துவேட்டு அரசியல் கூட்டத்தில
விடியும் வாழ்வின் எல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக