செவ்வாய், மே 26

சைக்கிள்





சொந்தங்களைப் பார்க்க
சொகுசு ஊர்தியா
சோதனையா – அல்ல
சாதனைப் பயணங்களா

புற்றுநோய் மனைவியை
பற்றுக் கொண்டதால்
பல மைல் கடந்து
பார்த்தான் மருத்துவம்

ஊனமானத் தந்தையை
ஊரோடு அழைத்துச் செல்ல
உயிரை பணயம் வைத்து
1200 கிமீ கடந்தாள் மகள்

தனித்திரு என்றோதுகையில்
இல்வாழ்க்கையில்
இவர்கள் இணைய
இன்று உதவியது

பசிக்கு உணவும்
இருக்க இடமும்
இல்லை என்றானபின்
வந்தாரை வாழவைப்பதா

இருவராய் நால்வராய்
ஈராயிரம் கிமீ கடக்க
சாதனைப் பயணமல்ல
சொந்தங்களோடு வாழ

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த கொடுமைகளை என்னவென்று சொல்வது...?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேதனைதான்

Kasthuri Rengan சொன்னது…

வலிகளைப் பதிவு செய்திருக்கும் கவிதை
இதுதான் செம்மையான இலக்கியவாதியின் சரியான செயல்பாடு
தொடர்க வெற்றி

அ. வேல்முருகன் சொன்னது…

தங்கள் அன்புக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழர்களே

H1B

H₂O HbA1c இதுபோல H1B இருக்குமோ கடவுச் சீட்டு அல்லாது கனவு தேசத்தில் நுழைய அடிமை ..... அல்ல அல்ல அனுமதிச் சீட்டாம் அறிவாளிகளுக்கென அந்நாளில் ...