புதன், மே 27

நாதமும் கடவுளும்




இசை 
மக்களுக்கா
கடவுளுக்கா

ஓசையில் ஆடுபவன்
கூத்தாண்டவனா
குதுகலித்து ஆடுபவனா

ஆடல்வல்லான்
ஆடிப்பார்த்ததுண்டா- தோற்ற
பார்வதியை தவிர

உருமியில் ஆடுவது
உடல் மட்டுமா
உள்ளமுமா

வித்தைகள்
விற்பனைக்கா
வயிறு வளர்க்கவா

கொரானவுக்கு அஞ்சிய
கடவுளுக்கு இசைக்க
கஞ்சிக் கிடைக்குமா

திறன் இருக்க
தெருவில் பாட
இரைப்பை நிறையலாம்

ஆக
கடவுள் கொடுக்காததை
கற்ற வித்தை தரும்


திருட்டு

  ரூ,1500 ரூ. 5000 ஆனது விலைவாசி அல்ல 28 டாலர் 72 டாலராக மாறியது இலாபமல்ல ரூ.1500 மின்சார கட்டணமல்ல 72 டாலர் நிலக்கரியின் விலையுமல்ல ரூ.6183...