வெள்ளி, ஆகஸ்ட் 19

கூழைக் கும்பிடு

உழைக்க தயாராக இல்லாதவன்தான் கூழைக் கும்பிடு போடுவான்

இந்த படத்தை பார்த்தால் என்ன தெரிகிறது.   தினமும் இதே காட்சிகள், கோட்டையிலும் கோமகள் இல்லம் செல்லும் வழியிலும்.

ஏனிந்த கூழைக் கும்பிடு, மகாராணி இடும் பிச்சைக்கா, பிழைப்புக்கா

மன்னாதி மன்னர்கள் மண்டியிட்டார்கள், மக்கள் மண்டியிட பழக்கப்படுத்தபடுகின்றனர்


சனி, ஆகஸ்ட் 13

அமெரிக்கா திவால் ஆனால்


அமெரிக்காவின் கடன் நிலவரத்தால் நாடே திவலாகும் சூழ்நிலை, உலகளவில் விலையேற்றேம், தடுமாற்றம்  ஆனால்

சில அமெரிக்க நிறுவனங்கள் ரொக்க கையிருப்பு  (பணம் கொழுத்த நிறுவனங்களின் பட்டியல் இதோ)

1.   சிட்டி பேங்க் குழுமம்                  1753.68 பில்லியன் டாலர்
2.   ஜே,பி. மார்கன்  சேஸ்                 935.42 பில்லியன் டாலர்
3.   கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம்          909.44 பில்லியன் டாலர்
4.   மேட் லைப் நிறுவனம்                 865.66 பில்லியன் டாலர்
5.   மார்கன் ஸ்டன்லி                     777.71 பில்லியன் டாலர்
6.   அமெரிக்கன் பன்னாட்டு குழுமம்       683.53 பில்லியன் டாலர்
7.   பேங்க் ஆப் அமெரிக்கா                667.61 பில்லியன் டாலர்
8.   புருடன்சியல் நிதி நிறுவனம்           617.45 பில்லியன் டாலர்
9.   ஜெனரல் எலக்டிரிக்                    419.31 பில்லியன் டாலர்
10. வெல்ஸ் பர்கோ                       297.89 பில்லியன் டாலர்

நாம் கணக்கில் சற்று மந்தம் என்பதால் ஒரு பில்லியன் டாலர் என்பது ரூ.4537 கோடி என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அந்நிறுவனங்கள் சம்பாதித்தை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள் உனக்கேன் வயிற்றெரிச்சல் என்றால்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நிறுவனங்கள் நிதி சுமையால் தள்ளாடியபோது அமெரிக்க அரசுதான் கைத்தூக்கி விட வேண்டும் அதாவது தள்ளுபடி, வட்டியில்லா கடன் இன்னும் பல சலுகைகள் வேண்டி அரசிடம் வந்தன.  இப்போது இந்நிறுவனங்கள் என்ன செய்யும்.

அமெரிக்காவின் மொத்த பற்றாக்குறை 1.65 டிரிலியன் டாலர்கள்தான்
ஒரு டிரிலியன் என்பது 1000 பில்லியன். கணக்கு சரியா?

வெள்ளி, ஆகஸ்ட் 5

தந்திரக்கலை

எனக்கு வந்த மின்னஞ்ஞல் இது.  இந்த காணொளியில் தந்திரக் கலையை இந்த ஜோடி மிக அற்புத செய்திருக்கிறார்கள், கண்டு களியுங்கள்


http://wimp.com/wildact/ 


புதன், ஆகஸ்ட் 3

சமச்சீர்



சீரற்ற நாட்டில்
சமச்சீரென்றால்
சரியா

அம்பானியும்
தாராவியும்
ஒன்றா

அரசு மரத்தடியும்
ஐந்து நட்சத்திரம்
இணையுமா

எதையும் காசால் வாங்குபவனும்
இலவசத்திற்கு ஏங்குபவனும்
எடையில் நிற்பார்களா

அரசு பள்ளி
மெட்ரிக் பள்ளி
அருகில் வரலாமா

அமெரிக்க ஏற்றுமதி
அம்பத்தூர் தொழிற்பேட்டையில்
ஆழ காலூன்றுமா

அவாளும் இவாளும்
அதையே படித்தால்
கலி முத்தாதோ

இரு துருவங்கள்
எந்த அறிவியலில்
சந்திக்கும்

சமச்சீரென்பது
சண்டாளர்களின்
சதியாகும்

பள்ளி செல்லுங்கள்
பழைய பாடம்
படியுங்கள்


அம்மா சொல்கிறேன்
குலகல்வியே
குடும்பத்தை காக்கும்

செவ்வாய், ஆகஸ்ட் 2

ஓபமாவின் உரை


எனக்கு வந்த மின்னஞ்ஞல்

ஒபமாவின் உரையென்று வந்தது, அவருடைய உரையின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் இந்நேரம் அறிந்தேன்.

Good morning, everybody.  I want to speak about the ongoing and increasingly urgent efforts to avoid default and reduce our deficit.
Right now, the House of Representatives is still trying to pass a bill that a majority of Republicans and Democrats in the Senate have already said they won’t vote for.  It’s a plan that would force us to re-live this crisis in just a few short months, holding our economy captive to Washington politics once again.  In other words, it does not solve the problem, and it has no chance of becoming law.  
What’s clear now is that any solution to avoid default must be bipartisan.  It must have the support of both parties that were sent here to represent the American people -– not just one faction.  It will have to have the support of both the House and the Senate.  And there are multiple ways to resolve this problem.  Senator Reid, a Democrat, has introduced a plan in the Senate that contains cuts agreed upon by both parties.  Senator McConnell, a Republican, offered a solution that could get us through this.  There are plenty of modifications we can make to either of these plans in order to get them passed through both the House and the Senate and would allow me to sign them into law.  And today I urge Democrats and Republicans in the Senate to find common ground on a plan that can get support -- that can get support from both parties in the House –- a plan that I can sign by Tuesday. 
Now, keep in mind, this is not a situation where the two parties are miles apart.  We’re in rough agreement about how much spending can be cut responsibly as a first step toward reducing our deficit.  We agree on a process where the next step is a debate in the coming months on tax reform and entitlement reform –- and I’m ready and willing to have that debate.  And if we need to put in place some kind of enforcement mechanism to hold us all accountable for making these reforms, I’ll support that too if it’s done in a smart and balanced way.   
So there are plenty of ways out of this mess.  But we are almost out of time.  We need to reach a compromise by Tuesday so that our country will have the ability to pay its bills on time, as we always have -- bills that include monthly Social Security checks, veterans’ benefits and the government contracts we’ve signed with thousands of businesses.  Keep in mind, if we don’t do that, if we don’t come to an agreement, we could lose our country’s AAA credit rating, not because we didn’t have the capacity to pay our bills -- we do -- but because we didn’t have a AAA political system to match our AAA credit rating.
And make no mistake -– for those who say they oppose tax increases on anyone, a lower credit rating would result potentially in a tax increase on everyone in the form of higher interest rates on their mortgages, their car loans, their credit cards.  And that’s inexcusable.
There are a lot of crises in the world that we can’t always predict or avoid -– hurricanes, earthquakes, tornadoes, terrorist attacks.  This isn’t one of those crises.  The power to solve this is in our hands.  And on a day when we’ve been reminded how fragile the economy already is, this is one burden we can lift ourselves.   We can end it with a simple vote –- a vote that Democrats and Republicans have been taking for decades, a vote that the leaders in Congress have taken for decades.
It’s not a vote that allows Congress to spend more money.  Raising the debt ceiling simply gives our country the ability to pay the bills that Congress has already racked up.  I want to emphasize that.  The debt ceiling does not determine how much more money we can spend, it simply authorizes us to pay the bills we already have racked up.  It gives the United States of America the ability to keep its word. 
Now, on Monday night, I asked the American people to make their voice heard in this debate, and the response was overwhelming.  So please, to all the American people, keep it up.  If you want to see a bipartisan compromise -– a bill that can pass both houses of Congress and that I can sign -- let your members of Congress know.  Make a phone call.  Send an email.  Tweet.  Keep the pressure on Washington, and we can get past this.
And for my part, our administration will be continuing to work with Democrats and Republicans all weekend long until we find a solution.  The time for putting party first is over.  The time for compromise on behalf of the American people is now.  And I am confident that we can solve this problem.  I’m confident that we will solve this problem.  For all the intrigue and all the drama that’s taking place on Capitol Hill right now, I’m confident that common sense and cooler heads will prevail.
But as I said earlier, we are now running out of time.  It’s important for everybody to step up and show the leadership that the American people expect.
Thank you. 

வியாழன், ஜூலை 28

லிபியா - கடாபி

இது எனக்கு வந்த மின்னஞ்ஞல்

Did you know this about Libya?

Some other facts (that mainstream media will never disclose) about Gaddafi and Libya

- Loans to Libyan citizens are given with NO interest.

- Students would get paid the average salary for the profession they are studying for.

- If you are unable to get employment the state would pay the full salary as if you were employed until you find employment.

- When you get married the couple gets an apartment or house for free from the Government.

- You could go to college anywhere in the world. The state pays 2,500 euros plus accommodation and car allowance.

- The cars are sold at factory cost.

- *Libya does not owe money, (not a cent) to anyone. No creditors.

- Free education and health care for all citizens.

- 25% of the population with a university degree.

- No beggars on the streets and nobody is homeless (until the recent bombing).

- Bread costs only $0.15 per loaf.

No wonder the US and other capitalist countries do not like Libya.

Gaddafi would not consent to taking loans from IMF or World Bank at high interest rates.

In other words Libya was INDEPENDENT!       That is the real reason for the war in Libya!

He may be a dictator, but that is not the US problem.

Also Gaddafi called on all Oil producing countries NOT to accept payment for oil in USD or Euros.

Two other leaders that have the courage to speak the truth are Hugo Chavez of Venezuela and Mahmoud Ahmedinejad of Iran and though both are fighting an uphill battle courtesy the cowardly Saudis who'd rather live in luxury while their people wallow in poverty, the battle is intensifying - the hypocrisy of the West is gradually being exposed.

Gaddafi recommended that oil get paid for in GOLD and that would have bankrupted just about every Western Country as most of them do not have gold reserves to match the rate at which they print their useless currencies and cheat the world.

செவ்வாய், ஜூலை 26

2800 நிறுவனங்கள் காணவில்லை

கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள்  காணவில்லை.  ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளைதான் நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்.    மேற்கண்ட 2800 நிறுவனங்களின் பங்குகளை நீங்கள் வைத்திருந்தால் தற்போது எதற்கும் உதவாது.   உதாரணம் DSQ Software, Pentafour, Pryamid Saimira,

இவர்கள் பங்கு சந்தையில் பட்டியலிட்டு நுழைந்தபோது அதிக அளவு வரவேற்பு இருந்தது.   அவர்கள் தேவைக்கு அதிகமாக அதாவது 2 அ 3 மடங்கு தொகை வசூலானது.  இப்போது சீந்துவாரில்லை.

ஏறக்குறைய 1640 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன இதில் 876 நிறுவனங்கள் கட்டாயமாக பங்கு சந்தை பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.  பங்கு வர்த்தகம் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் 1196.

compulsory delisted companies are Femnor Minerals, Lloyd Cements, Western Paques and CRB Capital.


பங்கு வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நிறுவனமான செபி மேற்கண்ட நிறுவனங்களை கட்டாயமாக பட்டியிலிருந்து நீக்குகிறது.   அதற்கு ஆயிரம் காரணங்கள் கேட்டு அவை திருப்தி அளிக்காத பட்சத்தில்தான் இந் நடவடிக்கை


கட்டாய நீக்கம் ஏற்பட்டால் முதலீட்டாளகளிடமிருந்து பங்குகளை வெளியீட்டாளர் நிறுவனத்தார்  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் பங்குதாரர் விரும்பும் பட்சத்தில்.


சரி இதெல்லாம் சட்டம், செபி, ஏற்கனவே செய்திதாளில் வந்தவை
ஏன் என்று கேள்வி கேளுங்கள்?  நிறைய விஷயங்கள் உள்ளன


நிறுவனங்கள் ஏன் பங்கு சந்தைக்கு வருகின்றன?
ஏன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன?
செபி என்ன செய்து வருகிறது?
பங்குதாரருக்கு இழப்பீடு ஏற்பட்டால் செபி உதவுமா?




நிறுவனங்கள் முன்பெல்லாம் பொதுமக்கள் பணத்தை வங்கிகள் மூலம் கொள்ளையடித்தன.  அதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.  மாதந்தோறும் வட்டி,  இருப்பு கணக்கு, நீதிமன்றம் மற்றும் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் சமர்ப்பித்தல், நிறுவனத்தை மூடிய பிறகும்.  அதிலிருந்து மீள கண்டுபிடித்த வழிதான்


பங்கு சந்தையில் நிதி திரட்டுதல், Initial Public Offer (IPO) Rights Issue  போன்றவை.


இங்கே பங்கு விலை நிர்ணயம் என்பது அவர்களின் சொத்து மதிப்பை பொறுத்து மட்டுமல்ல, அரசியல் தொடர்பு, பொதுமக்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் நன்மதிப்பு,  செயல்பாடு, கையிலுள்ள ஆர்டர்கள் மற்றும் பல காரணங்களை கொண்டு மதிப்பிடப்படுகிறது


ஆனால் பாதகங்கள் பற்றி ஒரிரு வரியோடு முடித்துக் கொள்கிறார்கள்.


ஆண்டுக்கொரு முறை டிவிடண்டு கொடுத்தால் போதும்,  ஆனால் நிறுவனங்கள் பெரும்பாலும் கொடுப்பதில்லை.   கொடுப்பதற்கு ஏதுமில்லை.  அல்லது மனமில்லை.  இரண்டு மூன்று ஆண்டுகளில் நிறுவனமே இருப்பதில்லை கொள்ளையடித்த 200 கோடியானாலும் 5000 கோடியானாலும்  ஏமாந்தது பொதுஜனம்.  எந்த நிறுவனம் தண்டனை பெற்றிருக்கிறது பங்கு சந்தையில் ஏமாற்றி


இதே 200 கோடி வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால் எத்தனை ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.   வட்டி கட்ட வேண்டும்,  அடமானமாக சொத்து வேறு தர வேண்டும்.  தன் பொறுப்பு காப்புறுதி தர வேண்டும்.  இதன் மூலம் அவர்களின் சொந்த சொந்துகளை நீதிமன்றம் மூலம் ஏலமிடலாம்  ஆனால் பங்கு சந்தையில் இவை ஏதுமில்லை.   செபிக்கு மட்டும் சில தகவல்கள் தர வேண்டும்.  அதை கொடுக்க முடியாமலே சில நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன.


ஒருநிறுவனத்தை மூடிவிட்டு அடுத்த நிறுவனம்மூலம் பினாமி பெயரில் மீண்டும் பங்கு சந்தையில் நிதி திரட்ட புறப்பட்டுவிடுவான் முதலாளி,  மறுபடியும் ஏமாற தயாராக இருப்பான் முதலீட்டாளன்


இதிலிருந்து தப்பிக்க என்ன வழி முதலாளிக்கு ஆயிரம் வழி, சிறு முதலீட்டாளருக்கு பட்டை நாமம்





திங்கள், ஜூலை 25

எங்கள் அடுக்ககத்தில் முஸ்லிம்

பிராமணர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் நானே சைவம் என்றுதான் குடி புகுந்தேன்.  கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அங்கே அசைவம் சமைத்ததில்லை.  தேவைப்படும் போது கடைக்குச் சென்றோ, எனது அம்மா வீட்டிற்கோ சென்று சாப்பிட்டுக் கொள்வோம்

அடுத்த மதத்தவர் எப்படி வந்தார், அதுவும் அவருக்கு பக்கத்து வீட்டுக்காரர் புஜை, புனஸ்காரம், பஜனை என இருப்பவர். சலவை செய்து கொடுக்கும் நபர் வந்தார் அத்தனை விடயத்தையும் தெரிவித்தார்.

வீட்டுக்கு சொந்தக்காரர் தமிழ்நாட்டிலேயே இல்லை.  அவருக்கு வேண்டியது பணம்.  ஆனால் ஆச்சாரம்.   ஆம் என்னிடம் உறுதிமொழி வாங்கியது போல நம் முஸ்லிம் குடும்பத்திடமும் வாக்குறுதி பெறப்பட்டுள்ளது.   அவர்கள் அசைவம் சமைக்க மாட்டோம் என தெரிவித்து குடி வந்ததுள்ளனர்.

என்ன செய்வது அவாள் இடத்தில் அவாள் சொல்படி நடக்க வேண்டியிருக்கிறது,   நமது சௌகரியங்கள் பிறகுதான்

எங்கோ ஒரு குரல்

யார் உன்னை அவாள் இடத்திற்கு போக சொன்னது ?........... 

 

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 8


அடமான சொத்து விற்பனை

சொத்து கையகப்படுத்துதல் அறிவிக்கை வெளியிட்டு முப்பது நாட்கள் கழித்து சொத்து விற்பனை செய்ய அறிவிக்கை வெளியிடலாம் என ஏற்கனவே பார்த்தோம்.  அதன் படி வங்கி சொத்து விற்பனை தொடர்பாக செய்தி தாளில் விளம்பரம் வெளியிடும் அது தமிழ் மற்றும் ஆங்கில செய்தி தாளாக இருக்கும். இதற்கும் ரூ. 25000 முதல் ரூ.50000 வரை ஆகும்.  இந்த செலவும் கடன்தாரர் தலையில்.

மேற்படி சட்டம் கீழ்கண்ட விற்பனை முறையை அங்கீகரிக்கிறது.  ஆயினும் பெரும்பான்மையான வங்கிகள் பொது ஏல முறை அல்லது சீலிட்ட டெண்டர் முறையில் அதிக விலை கோருபவருக்கு தீர்மானித்து விற்பனை செய்கிறது.

·         பொது ஏலம் மற்றும் விலைபுள்ளி கோருதல்
·         கடன்தாரர் ஒப்புதலுடன் விற்பனை
·         தனிப்பட்ட விற்பனை
·         மூன்று விலைபுள்ளி கோரி விற்பனை

பொது ஏலம் மற்றும் விலைபுள்ளி கோருதல்

அனைத்து வங்கிகளும் சொத்துக்களை விற்பதற்கு இந்த முறையையே கையாளுகின்றனர்.  எங்கு எப்படி உள்ளதோ அவ்வாறே விற்பனை (as is what basis  and as it where basis) என்று விளம்பரம் செய்து விற்பனை செய்வர்.  விளம்பரம் செய்து 30 நாட்கள் கழித்தே சொத்து விற்கப்படும்.  

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர் குறைந்தபட்ச ஏலத் தொகையில் 10தொகையை முன் வைப்பு தொகையாக வங்கி வரைவு மூலம் செலுத்த வேண்டும்.  நிராகரிக்கப்பட்ட ஏலதாரர்களுக்கு அத்தொகை அதாவது வங்கி வரைவோலையை உடனடியாக திருப்பி தந்து விடுவர்.

விற்பனை தேதியன்று கடன்தாரர் பணம் செலுத்தினால், விற்பனை நிறுத்தி வைக்கவும், விற்பனையை ரத்து செய்யவும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.  எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் விற்பனையை தள்ளி வைக்கவோ நிறுத்தவோ அவருக்கு அதிகாரம் உண்டு.  

ஒரு சொத்தின் குறைந்தபட்ச விலை ரூ.10 இலட்சமாக வங்கி நிர்ணயிக்க,   வங்கி 5 விலை புள்ளிகளை பெற்றிருக்கிறது.   அதை சமர்பித்தவர்கள் முன்னிலையில் திறப்பார்கள்.   பொது ஏலம் எனில் அதிக விலை கோரியவரின் தொகையிலிருந்து ஏலம் தொடங்கும்  உதாரணமாக ஐந்தில் ஒருவர் ரூ. 11 இலட்சம் என கோரியிருந்தால் அதிலிருந்து ஏலம் தொடங்கும்.  முடிவில் அதிகபட்ச தொகை கோருபவருக்கு விற்பனை உறுதி கடிதம் வழங்கப்படும். வெற்றிப் பெற்ற ஏலதாரர்   ஏலத்தொகையில் 25 அன்றே செலுத்த வேண்டும்.  மீதமுள்ள 75தொகையை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். 

பொதுவாக ஒரிரு நாட்கள் தள்ளி போனால் வங்கிகள் 75தொகையை பெற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால் சில அதிகாரிகள் 15 நாட்களுக்குள் அத் தொகை செலுத்தப்படவில்லையெனில்  ஏலத்தை ரத்து செய்வதோடு நீங்கள் செலுத்திய 25தொகையை (forfeit) திருப்பி தர இயலாது சட்டப்படி கடிதம் அனுப்புவர்.  எனவே வங்கி மூலம் சொத்து வாங்குபவர் இதில் கவனமாக இருக்க வேண்டும்

முழு தொகையும் செலுத்திய பின்பு வங்கி விற்பனை சான்றிதழ் (Sales Certificate) வழங்கும்.  தங்களுக்கு வசதியான ஒரு நாளில் பத்திர பதிவு அலுவலகத்தில் முத்திரைக் கட்டணம் செலுத்தி சொத்தை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். வங்கியின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கையெழுத்திடுவார். அதற்கான கட்டணம் மற்றும் செலவுத் தொகையை ஏலதாரர்  ஏற்க வேண்டும். 

மேற்படி சட்டத்தின் படி விற்பனை சான்றிதழ் (Sales Certificate) மட்டும் போதும்.   அதை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால்  பத்திரப் பதிவு அலுவலத்தில் தங்கள் பெயர் இடம் பெறாது. வில்லங்க சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களில் முந்தைய சொத்துடமையாளர் பெயர் இருக்கும்.  மேலும் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க பதிவு செய்து கொள்வது நலம்.




முழு பணம் செலுத்தியவுடன் தங்களுக்கு வங்கி தன்னிடம் அடமானம் வைக்கப்பட்ட சொத்து பத்திரம் மற்றும் அதன் தாய் பத்திரம், சிட்டா, அங்கல் மற்றும் அதன் இணைப்பு ஆவணங்களை உங்களிடம் வழங்குவர்.  அதோடு குறிப்பிட்ட சொத்தை உங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.  இதன்மூலம் சொத்து உங்கள் வசம் வருகிறது.  

கடன்தாரர் ஒப்புதலுடன் விற்பனை

தங்களுக்கு ஒரளவு பொருள் விளங்கும், இருப்பினும் இதை சற்று பார்ப்போம். இங்கு கடன்தாரர் சொத்தை வாங்கும் விருப்பமுள்ள நபரை அவரே தேர்ந்தெடுத்து அவருக்கு அடமான சொத்தை குறிப்பிட்ட விலைக்கு விற்பதற்கு தனக்கு ஆட்சேபனை ஏதம் இல்லை என எழுத்து மூலம் வங்கிக்கு தெரிவிக்கிறார்.  வங்கியும் தனக்கு எவ்வித இழப்பும் இல்லாத பட்சத்தில் இதை அங்கீகரித்து கடன்தாரர் சார்பில் விற்பனை பத்திரம் செய்து கொடுக்கும் மேற்கண்ட முறையில் விவரிக்கபட்டுள்ளபடி.

இதனால் வங்கிக்கு என்ன நன்மை, கடன்தாரருக்கு என்ன நன்மை.  வங்கிக்கு ஒரு கணக்கு அதிக தொந்தரவுகளின்றி முடிவடைகிறது.  கடன்தாரருக்கு  சொத்து வாங்கியவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் பணம் பெற வாய்ப்பிருக்கிறது.

தனிப்பட்ட விற்பனை

வங்கியானது ஒரு சொத்தை விற்க முயற்சி செய்கிறது.  அது ஓன்று மேற்பட்ட தடவை தோல்வியடைகிறது.  அதாவது  அடமான சொத்தை யாரும் வாங்க முன் வரவில்லை.

இவ்வாறான சமயங்களில்  முந்தைய குறைந்தபட்ச விலையை காட்டிலும் 10℅  குறைத்து விற்க முயற்சி செய்வர்.  அவ்வாறு போகாத நேரத்தில்.  யாராவது வங்கியை அணுகி தனக்கு மட்டுமே கிடைக்கும் பட்சதில் வங்கிக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கும்பட்சத்தில் இவ்வாறான விற்பனையை முடிவு செய்வர்.

இந்தமுறை விற்பனையில் விளம்பரம் தவிர்க்கப்படும்.  ஆனால் கடன்தாரருக்கு ஒரு அறிவிக்கை அனுப்பப்படும்.  அதில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும் அதைவிட கூடுதல் தொகை யாரேனும் இருந்தால் அவர்களை கடன்தாரர் வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம் என தெரிவிப்பார்.   முடிவில் வங்கி விற்பனையை மேற்கண்ட முறையில் நிறைவேற்றும்.

மூன்று விலைபுள்ளி கோரி விற்பனை

எந்தவொரு வங்கியும் இந்தவகையை பின்பற்றுவதில்லை.   குறைந்தபட்ச விலையை குறிப்பிட்டு  தன்னுடைய பட்டியலில்லுள்ள  அதாவது சொத்து வாங்க விருப்பமுள்ள  மூன்று நபர்களுக்கு அனுப்பி விலை கோருவர்.  பிறகு அதில் யார் அதிகமாக குறிப்பிட்டிருக்கிறாரோ அவருக்கு சொத்தை விற்பனை செய்வர்.  இதை சில ASSETS RECONSTRUCTION COMPANIES (ARC) நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதுவும் ஏற்கனவே விற்பனை தோல்வி அடைந்திருந்தால் அல்லது கடன்தாரர்  அதிக தொந்தரவு கொடுத்திருந்தால்.

இது தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள், கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்.  தெரிந்ததை பகிர்ந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்

இதையும் படியுங்கள்
                     அத்தியாயம் 7                  
                                               அத்தியாயம் 6
                                               அத்தியாயம் 5 
                             அத்தியாயம் 4 
                             அத்தியாயம் 3 
                             அத்தியாயம் 2 
                                              அத்தியாயம் 1 


பெண்களின் கணக்கு

நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி.    இது பெண்களிடம்தான் கேட்கப்பட்டது.

கணக்கில் அவர்கள் தடுமாறியது வருத்தமாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் நாம் calculater  துணையின்றி கணக்கு போடுவதில்லை.   ஒருவர் 8 சவரன், 10 சவரன் என முயன்று முடிவில் விடை போர்டு சொன்னது.

ஒரு வேளை தங்கத்தின் விலையால் இவர்கள் தடுமாறினார்களோ?


சனி, ஜூலை 23

பனியன்



இன்று எனது மகன் பனியன் வாங்கி கொடு அப்பா, எனது நண்பன் போட்டுக் கொண்டு வருகிறான் என்றான். நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

எனது 2 ம் வகுப்பு படிக்கிறான். நான் 8 ம் வகுப்பு முடித்து ஆண்டு விடுமுறையில்  அப்பாவிற்கு தெரிந்த ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறேன்.  வீட்டில் இருந்தால் மற்ற நண்பர்களோடு விளையாடி வம்போடு வருவேன் என்பதால் அந்த ஏற்பாடு.   வேலை செய்த இடத்தில் எட்டணா கொடுத்தார்கள்.  அந்த அலுவலகத்தில் தேவையற்ற பேப்பர்கள் என சிலவற்றை ஒதுக்கினார்கள்.  அதை எல்லாம் கட்டி எடுத்து கடையில் போட்டு ரூ.6 பெற்றுக் கொண்டேன்.

என்ன வாங்கலாம் என யோசித்த போது  என் மகனை போன்று எனக்கும் அப்போது பனியன் ஆசை.  ரூ.5.50 க்கு ஒரு பனியன் வாங்கி வீட்டுக் சென்றேன்.  அலுவலகம் முடித்து வந்த அப்பாவிடம் நான் வாங்கிய பனியனை போட்டு சென்று நின்றேன்.  வந்ததே கோபம் அவருக்கு. 

ஏது பணம் என்றார். சொன்னேன். அருகில் அழைத்தார். போட்டிருந்த புது பனியனை கிழித்தார். யாரை கேட்டு வாங்கினாய்.  நான் வாங்கி தர மாட்டேனா என்றார். 

பிறகு வாங்கித் தரவில்லை,  நான் வேலைக்கு சென்று வாங்கிக் கொண்டேன். அந்த நாட்களில் ஆண்டுக்கு இரண்டு சட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை.  வேலைக்கு வந்த நான்காண்டுகள் இதே நிலமையே நீடித்தது.

ஆனால் ஒன்று,  அன்றெல்லாம் அப்பா அம்மாவிற்கு ரூ,2 தான் தருவார் காய்கறி வாங்கி கொள் என்று.  அதற்குள்தான் குடும்பம். 

பழங்கதை அது போகட்டும்.  என் மகனுக்கு பனியன் வாங்க கடைக்கு போகவேண்டும்

வியாழன், ஜூலை 21

நாய்

வளர்ப்பு நாய்க்கு aquafina  ஊட்டுகிறான் ஒரு சிப்பந்தி,  ஏ,சி.  கார், விமானப் பயணம் இது அமெரிக்க நாய்க்கு கிடைக்கும் மரியாதை,

நாம் சாக்கடை கலந்த நீர் பருகுகிறோம்

மிக உயர்ந்த மனிதராக வகுத்து அமெரிக்க வெளியுறவு துறை செயலர் சாதாரண வழியில் வராமல் எந்தவித தணிக்கையுமின்றி தனி கதவு வழியாக வெளியேறுகிறார்.  அவர் வந்த விமானம் அருகே cisf முதல் இந்திய அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.  அவரின் பாதுகாப்பை அமெரிக்க அதிகாரிகள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.   நமது காவல் துறை ஏவல் துறையாகுகிறது.  உச்சக்கட்ட பாதுகாப்பு

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி அமெரிக்காவிற்கு சென்றால் எல்லோரையும் போல் பயணிகளோடு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.  பெண்கள் சேலை அணிந்திருந்தால் கையை தூக்கு காலைத் தூக்கு என கேவலப் படுத்தப்படுகின்றனர்.

அது அமெரிக்கா
இது இந்தியா

மக்களே இந்த மண்ணில் நீ இப்படி வாழ எண்ணமா





சனி, ஜூலை 16

வரைமுறையற்ற கட்டிடங்கள் இடிப்பு

கடந்த இரு நாட்களாக வரைமுறையற்ற கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக ஒரு செய்தி.   கடந்த முறை இதே போன்றதொரு நிலை.  நீதிமன்ற தடையாணை  இன்னும் சில காரணங்களால் ஒத்திவைப்பு.  தடையாணை ஒவ்வொரு ஆண்டும் வேறு நீட்டிக்கப்பட்டது.

தியாகராய நகரில் மட்டும் floor space index (FSI) 1.5 பதிலாக 9 விகிதத்தில் உள்ளதாக செய்திகள் குறிப்பிடுக்கின்றன.  வாகன நிறுத்துமிடம் சுத்தமாக இல்லை.  நடப்பதற்கே இடமில்லை.

வணிக நோக்கம் மட்டுமே குறிக்கோள்.  இதே பகுதியில் ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டும் நீதிமன்றமோ, அரசோ விழித்தெழவில்லை.

பாதுகாப்பு என்பது சிறிதும் கிடையாது இத்தகைய கட்டிடகளில்.  இங்கே பாதிக்கப்படுவது பொது மக்கள்.

தரை மற்றும் முதல் தளம் இருக்க வேண்டிய இடத்தில்  தரைகீழ் தளம், மற்றும் 6 முதல் 8 மாடிகள் வரை உள்ளன.  இதற்கு அங்கீகாரம் இல்லவே இல்லை ஆனால் வியாபாரம் நன்றாக நடக்கிறது.

இவர்களால் சராசரி நிலத்தின் விலை 10 மடங்கு கூடுதலாக விற்கப்படுகிறது.  அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டால் விலை தனாக குறைந்து விடும்.

அங்கீகரிப்பட்ட திட்டப்படி கட்டிடங்கள் கட்டப்படுமா?

விலை குறையுமா? அல்ல

கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்குமா?
அரசு அவகாசம் தருமா?

வேடிக்கை பாருங்கள் மக்களே

வியாழன், ஜூலை 14

மும்பை குண்டு வெடிப்பு

காலை செய்தி தாளை பார்த்து அந்த பகுதியிலுள்ள நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.   குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் மராட்டியர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது எனவும், கடந்த தாக்குதலை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு எனவும், கசாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்ததோ எனவும் பேசினார்.

எது எப்படியோ பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள்

புதன், ஜூலை 13

1947 முதல் நடந்த ஊழல் பட்டியல்


எனக்கு வந்த மின்னஞ்ஞல்,  ஏதேனும் விடுபட்டது என்றால் சேர்த்து  சொல்லுங்கள்.  கோடிக்களுக்கு மதிப்பில்லை என்று சும்மா இருந்து விடாதீர்கள்.

செவ்வாய், ஜூலை 12

ஆத்தாவின் ஆட்டம் ஆரம்பம்

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து, நான் மகிழ்ந்தேன், அரசு மருத்துவமனை இன்னும் இரண்டு திறந்து விடுவார்கள் என்று.  ஆனால் நான்காண்டுகளுக்கு ஒருலட்சம் காப்பீடு என்று அவர்கள் சொன்னால் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் என்று அம்மா சொல்லி விட்டார்கள்.

காப்பீட்டு நிறுவனத்திற்கு கொண்டாட்டம்

இலவசங்களை வாரி வழங்க அறிவித்து விட்டேன்
மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், டெண்டர் கோரி விட்டேன்
பணம்தான் இல்லை, ஆனால் குடிமகன்கள் இருக்கிறார்கள்
அதனால் 4% VAT 5%  ஆனது.

இதனால் குடிமகன்களுக்கு திண்டாட்டம்

வெள்ளி, ஜூலை 8

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 7


மூன்றுவிதமான விலை மதிப்பீடு

ஒரு சொத்திற்கு மூன்று விலையா? ஏன்? எதற்கு?  வங்கிக்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?

அப்படி ஏதும் இல்லை.  எந்தவொரு வங்கி அதிகாரியும்  வெளிபடையாக இயங்குபவர்.  விலையை அங்கீகரிப்பது ஒரு குழுதான்.  தனிப்பட்ட அதிகாரிக்கு எவ்வித அதிகாரமும் இதில் கிடையாது.  

விலை மதிப்பீடு செய்ய இதற்கென படித்த மதிப்பீட்டாளர்கள் இருக்கின்றனர்.  அவர்கள் அளிக்கும் விலை மதிப்பீட்டு விவரமே மூன்றுவிதமான விலை அவை

   ü           வழிகாட்டி விலை
   ü         சந்தை விலை
   ü         கட்டாய விற்பனை விலை

வழிகாட்டி விலை

இது அரசின் வழிகாட்டி விலை (guide line value)  தமிழகத்தை பொறுத்தவரை இந்த விவரத்தை தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையின் தளமான www.tnreginet.net  சொத்துக்களின் சர்வே எண் அளித்தோ அல்லது தெருவின் பெயர் அளித்தோ தெரிந்து கொள்ளலாம்.  இந்தவிலை சந்தை விலையாக இருக்க முடியாது ஒன்று அதிகமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்.   பிறகு எதற்கு இந்த விலை? 

உதாரணத்திற்கு உஸ்மான் சாலையின் ஒரு கிரவுண்ட் வழிகாட்டி விலை உஸ்மான் சாலை விலை   ரூ.2.88 கோடி சந்தை விலை 5 கோடி முதல் 15 கோடி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.  ஆனால் நீங்கள் பத்திரம் வாங்க வேண்டியது வழிகாட்டி மதிப்பான  விலைக்குதான்.   இது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலில். 

உதாரணமாக இதே சாலையில் வங்கி ஒரு கிரவுண்ட் இடத்தை ரூ.15 கோடிக்கு விற்கிறது என்றால் வாங்குபவர் ரூ.15  கோடிக்கு பத்திர செலவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட முதல் நடவடிக்கையில் ரூ.15 கோடி கொடுத்திருந்தாலும் ரூ. 2,88 கோடிக்கு பத்திரச் செலவு செய்தால் போதுமானது.  ஆனால் வங்கியில் சொத்து வாங்கினால் ரூ. 15 கோடிக்க பத்திர செலவு செய்தே ஆகவேண்டும்.  தப்பிக்க இயலாது. 

தமிழ்நாட்டில்
முத்திரைக் கட்டணம்      8 சதவிதம்
பத்திரப் பதிவு கட்டணம் 1 சதவிதம்  ஆக 9 சதவீதம் செலவு செய்ய வேண்டும்.

ம்...........  இன்னொன்று,,,, கறுப்பு வெள்ளை பண பரிமாற்றம் என்னவென  யாருக்கும் சந்தேமிருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள்.  மேற்கண்ட நடவடிக்கையே அது.

சமயத்தில் சொத்து மதிப்பு ஒரு கோடி ஆனால் பத்திர செலவு  இரண்டு கோடிக்கு.  ஆம் அரசுக்கு வருமானம்.  வேறுவழியில்லை.

சந்தை விலை

தலைப்பே சொல்கிறது.  இது சந்தையில் உள்ள விலை ஆம் மேற்கண்ட ரூ.15 கோடி என்பது சந்தை விலை.  சரி வங்கி சொத்தை சந்தை விலைக்கு விற்க முடியுமா?  முடியும் ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. 

என்ன என்னுடைய சொத்தை நட்டத்திற்கு வங்கி விற்குமா? அதற்கு வங்கி பொறுப்பேற்குமா?

வங்கியின் நோக்கம் அதுவல்ல.  ஆனால் சொத்தை விற்க வேண்டும்.  கடன்தாரருக்கு சொத்தை விற்க விருப்பமில்லை அல்லது அதிகவிலைக்கு சொத்தை விற்க வேண்டும்.


 கட்டாய விற்பனை விலை

அடமான சொத்தை விற்றே ஆக வேண்டுமென்ற நிலை இருப்பதால்  சந்தை விலையை காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் குறைவான விலையை மதிப்பிடுவார்கள்.  இதுவே கட்டாய விற்பனை விலை.  இதன் நோக்கம் அதிகமான நபர்களை ஏலத்தில் பங்கு பெற செய்வதாகும்.  சமயத்தில்  சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு அடமான சொத்து ஏலத்தில் விற்கப்படும்.   இது எல்லா ஏலத்திலும் நடைபெறுவதில்லை. சொத்தின் இருப்பிடம் மற்றும் தன்மையை பொறுத்து அமைகிறது.


அடமான சொத்தை விற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். அடுத்து விற்பனை எப்படி நடைபெறும், எனது சொத்தை நானே எலத்தில் கலந்து கொண்டு எடுத்துக் கொள்ள முடியுமா? ஏலம் எப்படி நடை பெறும்

இதையும் படியுங்கள்
                     அத்தியாயம் 6
                                               அத்தியாயம் 5
                             அத்தியாயம் 4
                             அத்தியாயம் 3
                             அத்தியாயம் 2
                             அத்தியாயம் 1

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 6

Physical  Possession:

சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் வங்கி நேரடியாகவோ அல்லது வங்கி சார்பில் முகவர் அமைத்தோ சொத்தை கையகப்படுத்தலாம்.  மத்திய வங்கி (Reserve Bank of India) இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Ø  வங்கி கையகப்படுத்துதல்
Ø  வங்கி முகவர் மூலம் கையகப்படுத்துதல்
Ø  வங்கி நீதிமன்றம் மூலம் கையகப்படுத்துதல்
Ø  வங்கி மாவட்ட ஆட்சியர் மூலம் கையகப்படுத்துதல்

வங்கி அதிகாரி கையகப்படுத்துதல்

வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி (Chief Manager and above) தன் சக அதிகாரிகளோடு அடமான சொத்திற்கு வந்து உரிமையாளரோ அல்லது வாடகைக்கு இருப்பவரோ இருந்தால் அவர்க்ளை வெளியேற்றி சொத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வார்.  அவ்வாறு எடுக்கும் போது அங்குள்ள பொருட்களை கணக்கெடுத்து குறித்துக் கொள்ளவார்.  இந் நடவடிக்கைகள் அனைத்தும் நிழற்படம் எடுத்தோ, காணொளி படம் எடுத்தோ வைத்துக் கொள்வார்.   மேற்கண்ட கையகப்படுத்தும் நடவடிக்கைகளை குறிப்பெழுதி, இரு சாட்சி கையெழுத்து பெற்றுக் கொள்வார்.

தேவைப்படின் அடமான சொத்து தன் பொறுப்பில் உள்ளதால் காப்பீடு மற்றும் காவலுக்கு ஆள் நியமிப்பார்.  இதன் செலவுகள் அனைத்து கடன்தாரரே செலுத்த வேண்டும்.  இல்லையென்றால் அவர் கணக்கில் ஏற்றப்படும்

இது போன்ற நடவடிக்கைகளை ஒரு சில துணிச்சல்மிக்க வங்கி அதிகாரிகள் மட்டுமே மேற்கொள்கின்றனர்.

வங்கி, முகவர் மூலம் கையகப்படுத்துதல்

அஞ்சா நெஞ்சருக்கும் சில நேரங்களில் துணை தேவைப்படும் அப்போது முகவர்களை நியமித்துக் கொள்வர். இது ஒன்றுமில்லை கூட்டம் சேர்ப்பது.  முகவர்கள் வங்கி அதிகாரியின் சொல்படி நடப்பவர்கள்.  அனைத்து நடவடிக்கைகளும் வங்கியின் பேரால் நடைபெறுவதால்  வங்கி அதிகாரியின்றி முகவர்கள் இந் நடவடிக்கையில் நேரடியாக இறங்க மாட்டார்கள்.  இதில் அனைத்து வேலைகளையும் முகவர் செய்வார் வங்கி அதிகாரியின் கண்காணிப்பில்.  மற்றபடி முதல் நடவடிக்கையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும்.

வங்கி, நீதிமன்றம் மூலம் கையகப்படுத்துதல்

Section 14 ன் படி வங்கி தலைமை (பெருநகர) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (CMM) ஒரு மனு தாக்கல் செய்து அடமான சொத்தை கையகப்படுத்துவார்.  வங்கியின் சார்பில் வழக்கறிஞர் மேற்கண்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வார்.  அந்த மனுவில் மனு சொத்து வங்கியின் அடமான சொத்து எனவும், கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் கடனை செலுத்தவில்லை என்பதால் அடமான சொத்தை கையகப்படுத்த உத்திரவிடுமாறு கோருவார்.  மனுவின் இணைப்பாக தங்கள் கடன் கோரிக்கை மனு, வங்கியுடனான கடன் ஏற்பாடு பத்திரம், ஈட்டுறுதி பத்திரம், சொத்துப் பத்திரம், சமீபத்திய வில்லங்க சான்றிதழ், 13 (2) அறிவிக்கை நகல், அதன் ஒப்புகை சீட்டு, பெயரளவு கையகப்படுத்துதல் நடந்திருந்தால் அதன் ஆதாரங்கள், ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  இவை அனைத்தும் சரியாக இருந்தால் வங்கியின் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரி ஒருநாள் நீதிமன்றம் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டும்.  அதை ஏற்று அடுத்த பத்து நாட்களுக்கு நீதிமன்றம் சொத்தை கையக்கப்படுத்த ஆணை வெளியிடும். 

அவ்வாணையில் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து சொத்தை கையக்கப்படுத்த குறிப்பிட்டு இருக்கும்.   ஆணையரின் ஊதியமும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.  ஆணையர் காவல் துறை உதவியோடு சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் ஒப்படைப்பார்.

அடமான சொத்து பூட்டப்பட்டிருந்தால் அதை உடைத்து திறக்கும் அதிகாரமும் வழக்கறிஞர் ஆணையருக்கு உண்டு.  இது குறித்தும் ஆணை வழங்க வேண்டும் என குறிப்பிடும் பட்சத்தில் நீதிமன்றம் இதற்கும் சேர்த்தே ஆணை வழங்குகிறது.

இந்நடவடிக்கைகளை நிழற்படம் படம் எடுத்தோ காணொளி படம் எடுத்தோ வழக்கறிஞர் ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

வங்கி மாவட்ட ஆட்சியர் மூலம் கையகப்படுத்துதல்

மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற அதிகாரம் உள்ளதால் அவரிடம் வங்கி கோரிக்கை மனு கொடுக்கலாம்.   மேற்கண்ட நடவடிக்கையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மூன்று நகல்களில் கையக்கப்படுத்தும் கோரிக்கை மனுவை கொடுக்க வேண்டும்.  இதை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் பரிசீலித்து மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு அனுப்பி வைப்பார்.  

மாவட்ட ஆட்சியர் அதனை ஏற்று சம்பந்தப்பட்ட அடமான சொத்து எல்லைக்குட்பட்ட வட்டாச்சியருக்கு (Thasildhar) சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் அளிக்குமாறு ஆணையிடுவார். 

வட்டாட்சியர், காவல் துறை உதவியோடு அடமான சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் ஒப்படைப்பார்.  அவரும் இந்நடவடிக்கைகளை நிழற்படம் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பெடுத்தும் வைத்துக் கொள்வார்

சரி அடமான சொத்தை வங்கி கையகப்படுத்தாமல் விற்பனை செய்ய முடியுமா? முடியும் ஆனால் விற்பனைக்கு பிறகு வங்கி மேற்கண்ட நடவடிக்கை மூலம் சொத்தை ஏலத்தில் எடுத்துவருக்கு பெற்றுக் கொடுக்கும்.  அல்லது ஏலத்தில் எடுத்தவரே சொத்தை கையகப்படுத்திக் கொள்வார்.

அடுத்த அத்தியாயம் மூன்று விதமான விலைக் குறிப்புகள் எந்த விலையை வங்கி எடுத்துக் கொள்ளும் 




இதையும் படிக்கவும்   
                                              அத்தியாயம் 5
                                              அத்தியாயம் 4
                                              அத்தியாயம் 3
                                              அத்தியாயம் 2
                                              அத்தியாயம் 1

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...