செவ்வாய், ஜூலை 24

மண்சோறுண்டால் குழந்தை



தாயென்றாய்
தாரமென்றாய்
தெய்வமென்றாய்
பெண்ணை

தாரம்
தாயாக
தின்ன வைத்தாய்
மண்ணை

கரு உருவாக
காதல் வேண்டும்
அல்ல
சோதனைக்குழாய் வேண்டும்

மண்சோறு தின்றால்
மகப்பேறு கிடைக்குமா
மலடி பட்டம்தான்
மாயமாகி போகுமா

பரிசுத்த ஆவியும்
அரகரனின் விந்தும்
ஆகமப் படி
ஆங்கொரு குழந்தையாகலாம்

கையை பின்கட்டி
கடவுள் நம்பிக்கையென
நாய் போல் உண்டால்
நாளையே குழந்தை கிட்டுமா

அவநம்பிக்கையும்
அஞ்ஞானத்தையும் - நீக்கிட
அங்கு பிறக்கும்
   புதியதொரு வழி

ஆம்
செய்ற்கை முறை
வாடகைத் தாய்
தத்துப்பிள்ளை
என எண்ணுங்கள்








சனி, ஜூன் 9

முஸ்லீம் என்றால்

15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார்.  உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்து கொண்டால்தான் தவறு, தண்டனை உண்டு.

நீதி மன்றறம் முஸ்லீம் பெண் 15வயதில் தாரளமாக திருமணம் செய்து கொள்ளலாம் தவறில்லை என்று காதல் கணவனோடு அனுப்பி வைத்து விட்டது.

இங்கே பெண் பெண்ணாக பார்க்கப்படுவதில்லை, மதமாக, சாதியாக போகப் பொருளாக பார்க்கப்படுவதால் இந்த நிலைப்பாடு

அடுத்து வித்தியாசமான நிகழ்வு

அசாம் சட்ட மன்ற உறுப்பினர் ரூமி நாத் என்ற பெண் தன் கணவன் மற்றும் குழந்தையை விட்டு விட்டு முஸ்லீமாக மதம் மாறி முஸ்லீம் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் திருமணம்??????????

அதான் முஸ்லீம் 5 திருமணம் செய்து கொள்ளலாமே

ஆண் மட்டும்தான் 5 திருமணம் செய்யலாமா?

இதோ மக்கள் பிரதிநிதி ஒரு முன்னோடியாக மதம் மாறி செய்து கொண்டார்.

யார் இந்த ஆயுதத்தை (5 திருமணம்) எடுத்துக் கொள்கிறார்கள், மதம் மாறுபவர்கள், தவறு செய்பவர்கள்

பாராட்டுவோம் மக்களே

திங்கள், ஜூன் 4

ஊடலும் கூடலும்

 



ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.                                                  குறள் 1304

வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்

கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்

அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்

சனி, ஜூன் 2

கண்கள்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.                                                        குறள் 1084




போர்குணமாய்
பேதையின் -கண்கள்
ஆயினும்
அமைதி தவழும்
அணங்கவள்

முரணாய்
உயிரை பருகவோ -அல்ல
உள்ளம் உருகவோ
ஏனிந்த மறுபாடு
என்னவளே

மதங்கொண்ட கொங்கை



கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.                                   குறள் -1087



உன்
முன்னழகை
மூடிய துணி

மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல




வெள்ளி, ஜூன் 1

காவலர்கள் உங்கள் நண்பன்

இது சென்னை காவல் துறையின் வசனம்

ஆனால் நேற்று சென்னை பல்கலையின் பேராசிரியர் ஒருவரை தலைகவசம் அணிய வில்லை என்பதற்காகவும், அபராதம் செலுத்த மட்டேன் என உறுதியாக இருந்ததாலும் எப்படி நடத்தினார்கள் என்பது செய்திதாளிகளின் படங்களை பார்த்து தெரிந்திருப்பீர்கள்.

படித்த மக்களுக்கு இந்த கதி என்றால் பாமர மக்களை இந்த போலீஸ் எப்படி நடத்தும்.  நாம் காணாததா? வச்சாத்தி, சிதம்பரம் பத்மினி, வீரப்பன் தேடல்கள்

உடுக்கை இழந்தவன் கைபோல இது வள்ளுவன் வாக்கு
யாராயிருந்தாலும், எதுவாக இருந்தாலும் சட்டையைபிடி இது தமிழக போலீஸின் மந்திரம்

நாம் என்ன செய்ய முடியும்

வெள்ளி, மே 25

காக்க முடியாதவன் கடவுள்

ஆரணியில்
ஆரம்பித்தது
அரகரனின்
அச்சு முறி 
   விளையாட்டு


ஆட்டத்தில்
அரங்கனும்
அங்கம் வகிக்க
அடுத்து சூடு பிடித்தது


அரகரனும்
அரங்கனும் ஆடிட
அகப்பட்டவன்
அய்யகோ........ பக்தகோடி


சித்திரை விழாவில்
சித்திரகுப்தன் 
பார்த்த கணக்கு (கூடுதலாய்)
பதினாறு 
   மே 10 வரை


அச்சு முறிந்து
அவன் காலடியிலே
சிவலோக பதவி


மிச்சம் 
மின்சாரம் தாக்கி
மீளா துயில்


காக்க முடியாதவன்
கடவுள்
மீட்க முடியாதவன்
மீட்பர்


பட்டாலும் திருந்தாதவன்
முட்டாள்
இருந்தாலும் வணங்குபவன்
??????????????????



கோல்கேட்டும் கடவுளும்

ஆலங்குச்சி
வேப்பங்குச்சி- அடுப்பு
உமிச் சாம்பல்
காலங் காலமாய்
காத்து வந்தது

மூலிகை
உப்பு
"ஜெல்"
"மின்ட்"
"டோட்டல்"
"சென்சிடிவ்" என்றும்

அம்பிகை
அய்யனார்
அல்லா
இராமன்
ஈஸ்வரன்
யேசு
இப்படியும்

நம்பிக்கைக்கு
தகுந்தவாறு
நயமான
விலையில்
வெளியீடுகள்

கோல்கேட்
வெளியிடுபவன்
முதலாளி

கடவுளை
வெளியிடுபவன்
யார்?

தெரியாதென்றால்
மதுரையின்
இளைய ஆதினத்தை
கேட்போம்

செவ்வாய், ஏப்ரல் 24

கலெக்டரும் நான்காவது தூணும்


கலெக்டர் என்றால்
கண்ணு தெரியும்
காட்டுவாசி என்றால்
கண்டு கொள்ளமாட்டார்

கானகத்தில்
காட்டு வேட்டையில்
காணமால் போன
உயிரை எழுதமாட்டார்

வேட்டுவ மக்களை
வேட்டையாடி
வேறிடம் போவென்று
விரட்டிட அமைதிகாப்பார்

காட்டை கூறுபோட்டு
கணிசமாக காசு பார்க்கும்
அரசோ, அரசியல்வாதியோ
கண்மூடி வாளாயிருப்பார்

நான்காவது தூணென்று
நானிலம் முழங்கிடும்
நாணயமற்ற இப்பத்திரிக்கைளை
நாற்சந்தியில் நிறுத்தும்
       காலமெப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,



புதன், ஏப்ரல் 11

காணவில்லை


Followers
Experimental

Displays a list of users who follow your blog.
This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!

நண்பர்கள் என்று பட்டியலிட்டு வைத்திருத்தேன் எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்களை, அப்படியொரு வாய்ப்பு எனக்கு வழங்க இயலாது என்பதுதான் மேற்கண்ட வாசகங்கள்.
இலவசம் எல்லோருக்கும் அல்ல என்பது இதன் பொருள்.  
அப்படி என்ன யாரும் படிக்க முடியாததை எழுதிவிட்டேன்



செவ்வாய், மார்ச் 20

தமிழனாக இருப்பதால் இந்தியனாக்கப்பட்டவன்

இங்கிருந்து கொண்டு நான் இந்தியன் இல்லை என்று சொன்னால் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தவன் என்று குற்றம் சாட்டப் படலாம்.  ஆனால் இங்கிருந்து சென்ற தமிழன் தன் உழைப்பால் வேறு நாட்டை வாழ வைத்தவன் வதைப்பட்டு, கொடுமையான முறையில் இலங்கையில் சாகடிப்பட்டான். இன்னும் வாழ்வில் ஒளி தெரியவில்லை.

அதற்கு தமிழனால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை,  இந்தியன் என சொல்லிக் கொள்பவனும் எதிர்ப்பு தெரிவிக்க முன் வரவில்லை, இந்திய அரசோ எந்த இறையாண்மையை காக்க மௌனம் காக்கிறது என தெரியவில்லை.

காணொளி கண்டு ரத்தம் சிந்திய கண்கள், தெருவில் இறங்கி போராடினால் இந்த இந்திய பாசம் வெளிவருமா

தமிழன் என்று தனித்து விடப் படுவோமா

வியாழன், மார்ச் 1

ஆப்பிள்

இந்நிறுவனம் தன் முதலீட்டாளர்களை மகிழ்விப்பதற்காகவும், புதிய முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும் பங்கு ஒன்றிக்கு 2 அமெரிக்க டாலர் காலாண்டு ஈவுத்தொகையாக தர திட்டமிட்டு இருப்பதாக the economic times  நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது,

இந்நிறுவனம் 97.6 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க லாபமாக பெற்றிருக்க அதில் ஆண்டுக்கு 7.46 பில்லியன் அமெரிக்க டாலரை ஈவுத் தொகையாக கொடுக்க திட்டமிட்டுருக்கிறது.

 100 பில்லியனில் 7.5%  கொடுத்துவிட்டு மீதம் என்ன செய்யப்போகிறார்கள்

ஆனால் அது எப்படி அத்தொகையை சம்பாதித்தது என தோழர் கலையரசன் அவர் தளத்தில் மிக அருமையாக விளக்கியுள்ளார் சென்று பாருங்கள்

ஆப்பிள் லாபம் பார்க்கும் வழி


வெள்ளி, டிசம்பர் 30

அண்ணன் - தம்பி- கடன்


கடந்த இரண்டு நாட்களாக, வியாபார காரணங்களுக்காக பிரிந்த அண்ணன் தம்பிகள், குடும்ப நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்தனர். எந்த செய்தி தாளை எடுத்தாலும் இது முன்பக்க செய்தியாக இருந்தது.  ஆம் திருபாய் அம்பானியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பிறந்த கிராமத்தில் குடும்பமாக சந்தித்துக் கொண்டனர் முகேஷ், அனில் மற்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதிரிகள்

மேலே உள்ள பட்டியல் அண்ணன் பொது துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன்.  இது சுமார் ரூ.7000 கோடி என பட்டியல் சொல்கிறது.

எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு முதலீடாக செலுத்திய தொகை இதில் இல்லை.  இது தவிர எண்ணற்ற பொதுமக்கள் சிறுதொகையாக பங்கில் முதலீடு செய்துள்ளனர்.

இப்படி அடுத்தவர் பணத்தில் சாம்ராஜ்யம் நடத்து சாமர்த்தியம் யாருக்கு வரும்.  அரசு அதற்கு துணை நிற்கிறது.

மேற்கண்டது அண்ணனின் கதை மட்டுமே.  தம்பியின் கதை தனிக் கதை.

புதன், டிசம்பர் 28

பாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை


பாரமவுண்ட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடன் விவரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.  இதன் படி ரூ.437 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.   ஆனால் உண்மையில் வங்கிகளுக்கு ரூ.2000 கோடி செலுத்த வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது,

இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால்,  மேற்கண்ட இக்கடன்களுக்கு எந்தவித ஈட்டுறுதியும் அதாவது எந்தவிதமான அசையா சொத்தும் கடனுக்கு ஈடாக கொடுக்காமல் பெற்றுள்ளது.

கல்வி கடன் ரூ.10 லட்சம் வேண்டுமென்றால் 1008 விதிகள், கண்டிப்பாக அசையா சொத்து ஈட்டுறுதி வேண்டுமென்று கேட்கும் வங்கிகள் எப்படி இக்கடனை வழங்கியது.

ஓ அதனால்தான் இந்த முறைகேடை விசாரிக்க அனைத்து வங்கிகளும் சி.பி,ஐ விசாரிக்க பரிந்துரைத்து விட்டு அமைதியாக இருக்கின்றன. சி.பி.ஐ.  விசாரித்து ஏதாவது பணம் வசூல் ஆகியுள்ளதா சொல்லுங்கள் மக்களே

செவ்வாய், டிசம்பர் 27

குங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்

கடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன்.  உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.

எதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.

கூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.

தசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார்.  அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.

அசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.

பூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாளை நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர்.  பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார்.  அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.

சொல்லுங்கள்

குங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா

101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா



புதன், டிசம்பர் 14

மன்மோகன் சிங்

நண்பர் அனுப்பி வைத்த மின்னஞ்ஞல், படியுங்கள், ரசியுங்கள்


Prime Minister Man Mohan Singh walks
into State Bank of India to cash a cheque. As he approaches the cashier
he says: 'Good Morning, Ma'am, could you please cash this cheque for me?'

Cashier: 'It would be my pleasure, Sir.
Could you please show me your ID?'

PM: (utterly shocked) 'I did not bring
my ID with me as I didn't think there was any need. I am Man Mohan Singh,
THE Prime Minister of India!'


Cashier: 'Yes Sir, I know who you are,
but with all the regulations and monitoring of the banks because of impostors
and forgers, etc., I must insist on seeing your ID.'


PM: 'Just ask anyone here at the Bank
who I am and they will tell you. Everybody knows who I am!'


Cashier: 'I am sorry Mr. Prime Minister,
but these are the bank rules and I must follow them strictly.'


PM: 'I am urging you, please, to cash
this cheque. Soniaji has gone to America and Rahulji has, by mistake, taken
the keys of the safe with him. I need some extra spending money urgently.'


Cashier: 'Look Mr. Prime Minister, this
is what we can do. Some months back, Baba Ramdev came into the bank without
ID. To prove he was Ramdev, he pulled his tummy in so much that it went
and touched his back. With that feat, we knew him to be Baba Ramdev and
cashed his cheque. On another occasion, Yuvraj Singh came in without his
ID. To prove his identity, he just went out and hit six consecutive sixers.
With that we knew for certain that he was indeed Yuvi himself, and we cashed
his cheque. So, Mr. Prime Minister, what can you do to prove that it is
you, and only you, as the Prime Minister of India?'



PM stood there thinking, thinking and
thinking, and finally said: 'Honestly, my mind is totally blank ~ there
is nothing that comes to my mind... I can't think of a single thing!!!'



Cashier: 'There you are! That is enough. Now I don't have any doubt
that you are our Prime Minister Dr.Man Mohan Singh.
In what denominations would you like the cash, Mr. Prime Minister?

செவ்வாய், டிசம்பர் 6

பொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்

நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது.

காரணம்

வழக்குகளால் கால விரயம் ஏற்படும், மேலும் நீண்ட நாட்கள் இதற்கு ஏற்படும். மேலும் முதலீட்டாளர்கள் பாதிக்கபடுவார்கள்.  ஆம் எந்தவொரு வழக்கும் மேற்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பை பாதிக்கும்.  அப்பாதிப்பு சிறு முதலீட்டார்களான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  ஆம் அவர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்த பணம் காணாமல் போய் விடும்.  எனவே நடவடிக்கை கைவிடப்பட்டு வேறு நிவாரணங்கள் பரிசீலிக்கப்படுகிறது.


எதற்காக

கோதவரி படுகையில் அதாவது KG-D6 என்னுமிடத்தில் குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் அந் நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை.  குறைவாகவே உற்பத்தி செய்து நட்ட கணக்கு எழுதியுள்ளது.    இதனால் ஏற்பட்ட நட்டதிற்கு அபராதத் தொகை வசூலிக்க கடிதம் அனுப்பபடுகிறது.  அதற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடிதத்தால் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.


இதே விஷயம் தொடர்பாக அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையிட்டு கொள்ள உச்ச நீதி மற்றம் தலையிட்டு தீர்த்து வைத்தது ஞாபகம் இருக்கலாம்.  


இந்த திட்டத்திற்கு  ஏற்கனவே ஏறக்குறைய ரூ.9000 கோடி செலவிட்டுள்ளதாக கணக்கெழுதி வைத்துள்ளது ரிலையன்ஸ்.   2 மில்லியன் வாயு எடுக்க வேண்டிய இடத்தில் 1 மில்லியன்தான் எடுக்கிறார்கள்.  ஆனால் செலவு..............


2000 ஆம் ஆண்டில் லைசென்சு பெற்ற ரிலையன்ஸ் இன்னும் லாபம் எதுவும் அரசு செலுத்தவில்லை.   அரசு இன்றுதான் நட்ட கணக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.  ஏன் தெரியுமா கள்ள கணக்கு.  முதலீட்டில் ஒரு பகுதி எடுக்கும் வரை அரசுக்கு எவ்வித லாபத் தொகையும் செலுத்த தேவையில்லை என்பது ஒரு விதி.


இந்த துரப்பன பணிக்காக பல்வேறு சலுகைகள் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்போதும் சலுகை பெற்றுள்ளது


ஆம் மக்களே உங்கள் பெயரால்

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...