சனி, டிசம்பர் 29
செவ்வாய், டிசம்பர் 25
நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி
முகநூல், இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் அங்கொரு விலாசம் உண்டு. இலவசமாக கிடைக்கிறதா இந்த சேவை. இல்லை
உங்கள் தகவல்களை காசாகிக் கொண்டு கொழிக்கிறது. ஆனால் அது போதவில்லை என்று அதன் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை மேலும் அழுத்தம் கொடுக்கிறது
நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி வருமானம் ஈட்டுகிறது இந்த தளம். கடந்த ஆண்டு ஒரு முகநூல் பயனாளர் மூலம் ரூ.65.46 கிட்டியது என்றால் இந்த ஆண்டு ரூ.68.76 என்று இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் கூட வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம். அதற்காக முகநூல் நடத்துபவர்கள் உங்கள் தகவல்களை விற்க முன்வந்து விட்டார்கள்.
ஆம். ரூ.55 கொடுத்தால் நீங்கள் தனிப்பட்டது என்று வைத்திருக்கும் தகவல் முதல், உங்கள் தொடர்பு தகவல் வரை கொடுக்க தயாராகி விட்டது.
அடுத்து உங்கள் தகவல் பலகையில் மிக அதிகமான விளம்பரங்கள் வந்து விழப் போகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் முகநூல் பக்கத்தை பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமான வருமானம் முகநூல் நிறுவனத்திற்கு.
அதுமட்டுமல்ல, சில இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் தானகவே முகநூலிலிருந்து தங்கள் தகவல்களை திரட்டி கொள்ளப் போகிறது. அதற்கு காசு முகநூல் நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.
ஆக யோசித்து செயல்படுங்கள். தனிப்பட்ட தகவல்களை தவிருங்கள்.
சனி, டிசம்பர் 15
படியில் பயணம் - படிப்பு மரணம்
மெட்ராஸ் உயர் நீதி மன்றம், தன்னிச்சையாக எடுத்து கொண்ட ஒரு வழக்கில், ஒரு மாணவன் இருமுறைக்கு மேல் படியில் பயணம் செய்தால் அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் பெற்றொருக்க தகவல் தெரிவித்து விட்டு, விளக்கம் கோரி, பள்ளியிலிருந்து நீக்கி விடலாம்.
தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது சரியானது, ஆனால் வியாக்கனம் சரியில்லை என்பது எனது கருத்து
அவர் அரசை பார்த்து கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது.
- ஒரு பேரூந்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்,
- உட்காரும் வசதி தவிர்த்து எத்தனை பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.
- ஏன் நடத்துனர் மாணவர்களை படியில் தொங்கி கொண்டு வர அனுமதித்தார்.
- ஏன் பேரூந்திற்கு கதவு பொருத்தவில்லை
- பள்ளி மற்றும் நெரிசல் நேரத்தில் இலவச பயணசீட்டு வழங்கிய அரசு ஏன் மாணவர்களுக்கு என தனி பேரூந்து இயக்க கூடாது
இது போன்ற கேள்விகள் தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட வழக்கில் நீதி நிலை நாட்டப் பட்டிருக்கும்
ஆனால், இங்கே குற்றம் செய்தது மக்கள், அவர்கள்தான் படியில் தொங்கி கொண்டு வந்தனர். அவர்களுக்கு கல்வி மறுப்பது ஒன்றும் தவறில்லை.
காரில் செல்பவர்கள், தனி வழியில் செல்பவர்கள் அப்படிதான் சிந்திப்பார்கள். இப்படி நீதி வழங்கியவர்கள் பேரூந்தில்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும் என நாம் தீர்ப்பு வழங்கினால் என்ன.
நியாயமான தீர்ப்பு கிடைக்குமல்லவா?
சனி, டிசம்பர் 8
மின்சாரம், பிஜ்லி, கரண்ட்
இருபதுகளில்
இல்லிச் விளக்கென
இளம் ருஷ்யர்கள்
கொண்டாடினர்
நாற்பதுகளின் இறுதியில்
பெட்ரோமாக்ஸ் ஒளியில்
நாடகம் நடித்து
நடிகர் திலகமானார் - தருமி
என்பதுகளின் இறுதியில்
அரிக்கேன் விளக்கில்
ஆவடியில்
வாழ பழகினேன்
ஏசைய்யாவோ
எம்பெரும்மானோ
எங்கிருக்கிறார் - எனில்
தெரியாதென்பேன்
நாளின்
இருபத்து நான்கு மணியில்
எப்போ வருமென்றால்
தெரியாதென்பேன்
நூறாண்டு கடந்தும்
மாறாதிந்த கோலம்
தீராதா? - ஒளிவந்து
இருளும் மாறாதா
பாட்டாளி ஆட்சியிலே
பலருக்கும் மின்சாரம்
பசையுள்ளோருக்கே மின்சாரம்
பா.....ச. ஆட்சியிலே
குறிப்பு: 1920 ல் ருஷ்ய கிராமங்களில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன பாட்டாளி வர்க்க தலைவனின் பெயரைச் சொல்லி
மக்கள் அழைத்தனர். ஆட்சியை பிடித்த மூன்று வருடத்தில் கிராமத் தெருக்களுக்கு மின்சாரம் வழங்க முடிந்தது அன்று ஆனால் .......
செவ்வாய், டிசம்பர் 4
கன்னி மேரி
கட்டிய மனைவி
கலங்கிதான் போனான்
கைப்பிடித்தவன்
பரிசுத்த ஆவியோ - எந்த
பாவியின் கழிவோ
பாரம் சுமக்கிறாள்
பத்தினியானவள்
காரணங்கள் எதுவாயினும்
கழுவி விட
மார்க்கம் இருப்பதால்
மரித்துப் போனதொரு மார்க்கம்
படுக்கை
படுப்பதற்கு மட்டுமல்ல
பத்தினியை
பரவசப் படுத்தவும்
அருகிருந்தும்
அனாதையானால்
அரவணைக்க
அடுத்தவனை நாடதான் வேண்டும்
அசரிரீ
ஆசீர்வதித்தது
சூசை
சும்மா இருந்துவிட்டான்
அது சரியென
அவனே இருந்துவிட்ட போது
நாதியற்று - இவன்
நடுத் தெருவில் நிற்பானா
இத்தனையும் ஆனபின்
என்னுயிரே என்றிருந்தால்
இயலாமையும் -எதையும்
ஏற்கும் மனப்பான்மையும்
வேளைக்கு உணவும்
பிள்ளைக்குத் தாயும்
வெளியுலக்குக்கு குடும்பமும்
இன்றியமையாத் தேவைகள்
ஆதலின் - இக்
காதலுக்கு
கண்ட பெயரிட்டு
கருகி விடாதீர்
ஞாயிறு, டிசம்பர் 2
தேடல்
கடந்த நிமிடம் வரை
கண்முன்னிருந்தான்
காணாது சென்றான்
நிலவே
நீயெங்கும் செல்லாதே
நினதொளியில்தான் - அவனை
தேட வேண்டும்
ஞாயிறு, நவம்பர் 18
பெல்ஜியம் கண்ணாடி
கிரேக்கத்தின்
பேரழகியாய்
இங்கிலாந்து ராணியாய்
என்தேவி நீயாகிட
சீனப்பட்டு வாங்கினேன்
சித்திரமாய்
சிங்காரமாய் தெரிய
ஆப்பிரிக்க வைரத்தை
ஆரணங்கே நீயணிய
அத்தானும் மயங்குவேனே
இத்தாலி காலணியில்
இன்னும் ஒய்யாரமாவாய்
என்னினிய பொன்மணியே
அத்தரும் ஜவ்வாதும்
மருதாணியும் வெண்ணையும்
கற்கால அழகடி
தற்கால தேவதையே - நீ
கற்கால அழகடி
தற்கால தேவதையே - நீ
தரிக்க அமெரிக்காவின்
“டாமி கேர்ல்”
வாங்கினேன்
உதட்டுச்சாயமும் நகப்பூச்சும்
உனதழகை கூட்ட
உனதழகை கூட்ட
ரெவ்லானில் வாங்கினேன்
பிக்காசோவும் ரவிவர்மனும்
பேரழகை கண்டு
பித்தத்தில் கலங்குவரடி உன்னழகை ஓவியமாய்
உலகே வியக்கும்படி
எம்.எப் ஹுசேன் படைப்பானடி
ஊரெல்லாம் சுற்றினாலும்
ஊட்டி ரோஜா, ஜாதிமல்லி
உனக்கென வாங்கினேன்
ஆகா
அத்தனையும் வாங்கினேன்
அத்தை மகளே - ஆனால்
பலமணி செலவிட்டு
பலமுறை சரிசெய்து
பக்குவமாய் வைத்திட
பேரழகே
பெல்ஜியம் கண்ணாடி
கிடைக்கலியே - என்ன செய்ய
சனி, நவம்பர் 17
ஆன்மா
நேருவின் கதையை
நெட்டுரு
செய்து கொண்டிருந்தான்
எனது மகன் அருணன்
அப்பா
நாம் இறந்த பிறகு
மேலுலகில்
நேருமாமாவை
பார்க்கலாமல்லவா
என்றான்
எப்படி என்றேன்
மூச்சு நின்றவுடன்
பூமியிலிருந்து
மேலே சென்றால்
பார்க்கலாம் என்றான்
மூச்சு
மூஞ்சூறு வாகனத்தில்
செல்லுமா என்றேன்
நான் ஈ
திரைப்படத்தில்
ஈ முட்டையில்
ஆன்மா (மூச்சு)
சென்றதென்றான்
ஆம்
மலத்தில் நெளியும்
புழுவாக கூட
ஆன்மா இருக்கலாம்
எதற்கும் திரும்பி
பாருங்கள்
செவ்வாய், நவம்பர் 13
மாலை எனை வாட்டுது
மாயும்என் மாயா உயிர்
குறள் 1230
சென்றனன்
செல்வம் தேடி
செல்லாதிருந்தது உயிர்
ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளைக் கொல்லுது
சென்றனன்
செல்வம் தேடி
செல்லாதிருந்தது உயிர்
ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளைக் கொல்லுது
வெள்ளி, நவம்பர் 9
சட்டம் அதிகாரத்தின் பிடியில்
பதிவர் என்ற முறையில் எனக்கு அய்யா தருமி அவர்களின் கோரிக்கை மிகச் சரியானது. காலதாமதமாக அவர் செய்தியை இங்கே பதிவிடுகிறேன். அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே எனது நண்பர்கள் மற்றும் உடன் படுபவர்கள், உடன் படாதவர்கள் அனைவரும் இதை விவாத பொருளாக மட்டும் கொள்ளாமல் இதன் தன்மையை, அதிகாரத்தின் போக்கை, அது நாளையே நம்மையும் இப்படி தாக்கும் என்ற புரிதலோடு எதிர்க்க வேண்டும் என்று கோருகிறேன்
மேலும் விவரங்களுக்கு அய்யாவின் தளத்தின் செய்திகளை பார்க்கவும்
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html
I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’
”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.
இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
*
சனி, நவம்பர் 3
புதன், அக்டோபர் 24
நூல் விமர்சனம்
ஆவணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இதன் ஆசிரியர்கள் சொல்கின்றனர். இதில் சொல்லப்படுகிற நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை கவனிக்கும் போது, இது சாதியத்தை உயர்த்தி பிடிக்க எழுதப்பட்ட நூலாக தெரிகிறதே தவிர தெரியாத உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நூலாக தெரியவில்லை
நாடார் சமுதாய பெண்டீர் தோள்சீலை அணிந்து வாழ்ந்தனர் என்றும், மேல்சாதி பெண்டீர்கள்தான் தோள்சீலை அணியாமல் வாழ்ந்தனர் என்றும் நிழற்பட ஆதாரத்துடன் நிறுவ முயற்சி செய்துள்ளனர்.
இதுபோன்ற நூல்கள் எழுத முற்படுகையில் சற்றேனும் களப்பணி செய்து செய்திகள் சேகரித்து எழுதியிருக்க வேண்டும். எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள் இது தொடர்பாக களப்பணி செய்து செய்தி சேகரித்ததாகவும் ஆனால் அதற்குள் இயற்கை எய்தி விட்டதாகவும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.
ஆண்ட பரம்பரை என்ற எண்ணத்தில் எழுத நினைத்ததால் அவமான படுத்தியதைப் பற்றி ஆவணங்கள் இருந்தாலும் தவிர்த்திருக்கிறார்கள்.
நாடார், சாணார், கிராமணி என சாதியை பட்டியலிட்டு வைத்திருந்தாலும் நூலாசிரியர் அச்சாதியை குறிப்பிடுகையில் சான்றோர் சாதி என்று வழக்த்திலும் பயன்பாட்டிலும் இல்லாத சொல்லை பயன் படுத்துவதே தான் உயர்ந்த சாதி - சூத்திரன் அல்ல சத்திரியன் என்று சொல்வதற்காக எழுதியிருக்கின்றனர்.
இக்கலகம் நடந்ததாக கூறப்படும் இரணியல் மற்றும் அதன் வட்டாராத்தில் எத்தனை நாடார் மக்களை சந்தித்தனர் அதைவிட எதிர் சாதி மக்கள் எத்தனை பேரை சந்தித்தனர் என்றால் ஒருவருமில்லை.
தெரியாத உண்மைகள்
1836 ஆம் ஆண்டில் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் 1,64,864 அடிமைகள் இருந்தனர் எனக் கணக்கிடப்பட்டது. ,,,,,, இந்தஅடிமமைகள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியினரான செருமர், புலையர், சாம்பவர் (பறையர்) முதலியோர்களே
ஆங்கிலேய கும்பினி அரசு 1843 ஆம் ஆண்டு Act V (ஐந்தாம் பிரிவுச் சட்டம்) ஒன்றைப் பிரகடனப்படுத்திற்று. அதன் மூலம் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்படுகிறது என அறிவித்தது.
நெய்யாறிங்கரை, இரணியல் பாறைச்சாலை ஆகிய ஊர்களில் அடிமைச் சந்தை இருந்து வந்தது உண்மையே, இங்கெல்லாம் பெரும்பாலும் உயர் வர்க்கச் சான்றோர் உட்பட நிலவுடமைச் சமூகத்தவர் உழுவு தொடர்பான பணிகளுக்காக வாங்கி விற்று பரிவர்தனை செய்து வந்தனர்.
நூலின் பக்கம் 152 மற்றும் 153
குட்டத்தை சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப்பற்று, செட்டியாபற்று, தண்டுபற்று...........காயாமொழி போன்ற ஐம்பதற்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களெல்லாம் தம் குடிகள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்திவந்தனர்.
நூலின் பக்கம் 132
....கிறிஸ்தவ சமயத்தில் சேராமல் இந்து சமயத்திலேயே நீடித்து நின்ற சான்றோர் சமூகத்தவர் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கித் தங்களை இத்தகை நிலையில் வைத்திருப்பது இந்து சமயமே என்ற குரோதத்தையும், தங்கள் குலப் பாரம்பரியம் குறித்த இழிவுணர்வையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமாகும்
நூலின் பக்கம் 133
எல்லிஸூக்கு தமிழ் கற்பித்த இராமச்சந்திர கவிராயர் (சத்திரிய ராஜூ இனத்தவர்) சென்னை கல்விச் சங்கத்துத் தலைமைப் புலவர்களுள் ஒருவராவார். அவர் 1824 ஆம் ஆண்டில் அரச குல பஞ்சரத்னம் என்ற பெயரில் ஐந்து பாடல்களை இயறியுள்ளார். அவர் அரசர்குலம் என்று குறிப்பிடுவது கிராமணி குலத்தவராகிய சான்றோர்களையே.
நூலின் பக்கம் 127
ஆங்கிலேயர்களின்........... ஜாதியக் கொடுமைகளிலிருந்தும் ஒடுக்க முறைகளிலிருந்தும் தப்பித்து உய்வடைவதற்காகச் சான்றோர் சாதியினர் யாரும் மதம் மாறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்
நூலின் பக்கம் 119
1829 ஆம் ஆண்டு அரசு பெயரில் வெளியிடப்பட்ட ஆணையின் படி........ இந்த ஆணை சான்றோர் சமூகத்தவருக்குத் திருப்தியளிக்கவில்லை தங்களை விடச் சாதியடுக்கில் தாழ்ந்த அந்தஸ்தில் இருக்கின்ற முக்குவத்திகள் போலத் தங்கள் சமூகப் பெண்டிரும் உடையுடுத்துவதா என்று அவர்கள் அதிருப்தியடைந்தனர்
நூலின் பக்கம் 108 மற்றும் 109
..........இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சான்றோர் சமூகத்தின் கீழ் அடுக்களிலிருந்த சேர்வைக்காரச் சான்றார், பனையேறிச் சான்றார் போன்றவர்கள் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயத்தில்பால் ஈக்கப்பட நேர்ந்தது.
நூலின் பக்கம் 104
....... நாடாள்வான் என்ற பட்டப் பெயரின் திரிபான நாடான் என்ற சாதிப் பட்டத்தை சூட்டிக் கொள்ளும் உரிமையை இக்காலகட்டம்வரை கள்ளச் சான்றார்கள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
நூலின் பக்கம் 64
சான்றோர் சமூகத்தின் கீழ்மட்டத்தை சேர்ந்தவர்களே இத்தகைய தாக்கதலுருக்கு ஆளாயினர் என்பதால் உயர்மட்டச் சான்றோர் குலப்பிரிவினர் தமக்கு இப்பிரச்சினையில் எந்தவிதத் தொடர்பும் இல்லாததுபோல் காட்டிக் கொண்டு அமைதிகாத்தனர்.
நூலின் பக்கம் 27
ஆரம்ப பக்கங்களில் நூலாசிரியர்கள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆதாரம் தேடியிருக்கிறார் ஆண்ட பரம்பரை இந்த சான்றோர் குலம் என நிறுவுவதற்கு
மேற்காணும் மேற்கோள்களை படித்தாலே போதும் நூலின் முரண் தெரியும்.
- 1980 ஆண்டு கூட இந்த நாடார் சாதியினர் இரணியல் போன்ற ஊர்களில் வேளாளர் இல்லங்களில் உள்ள தறிக் கூடங்களில் வேலை செய்ய தெரு வழியாக வீட்டின் உள்ளே செல்ல இயலாது. வீட்டின் பின்புற வழியாகதான் உள்ளே நுழைய முடியும்
- ஆக நூலாசிரியர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நூலை படித்தோ அல்லது மேற்கண்ட மேற்கோள்களை படித்தோ அறிந்து கொள்ளவும்
- அடிமையில்லை, உருமால் கட்டி ஊரை ஆண்ட பரம்பரை என சொல்ல வருகின்றனர்.
- சான்றோர்கள், இந்துக்கள் அவர்கள் கிருஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டனர். பிராமணர்களை புறந்தள்ளி பண்டாரங்களை கொண்டு வழிபாடு செய்து வந்த இந்த இனத்தை ஆசிரியர்கள் சாதி இந்துக்களாக நிறுவ முயற்சிக்கிறார்கள். அதற்கு அய்யா வைகுந்தரையும் சாட்சியாக இழுக்கின்றனர்.
- இந்து எனப்படும் இச்சான்றோர்களின் தெய்வங்களைப் பற்றி செய்திகள் ஒன்றுமில்லை.
- களப்பணி ஏதும் இல்லை. ஆவணங்களே அடிப்படை என்று கூறி இவர்களின் கருத்தையும் ஏற்றி சொல்லியுள்ளனர்
- 1822 ல் ஆரம்பித்த இப்போராட்டம் 1849 வரை நீடித்தற்கான காரணத்தை வரி வசூலிப்பதில் பிரச்சனை, மதப் பிரச்சனை என்ற நோக்கில் ஆவணங்களை தேடியுள்ளனர்.
- 1921 ஆம் ஆண்டு நாடார் வங்கி ஆரம்பித்தவர்கள், 1937 ஆம் ஆண்டு வரை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லையே ஏன்? ஆசிரியர்கள் சொல்கிறார்கள் நாங்கள் கமுதி மீனாட்சி கோயிலுக்கு சென்று வந்தோம் என்று
ஆயினும்
உங்கள் கருத்தையும் என் விமர்சனத்தில் தவறிருப்பின் இங்கேயே சுட்டிக் காட்டும்படி வேண்டுகிறேன்.
செவ்வாய், அக்டோபர் 16
புதன், அக்டோபர் 3
காதல் வளர்ந்த கதை
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
குறள் 1144
அவளோடு பேசுவதாக
அவரவர் பேசினர்
அதுவே எங்கள்
அன்பை வளர்த்தது
ஊர்பேச்சே
ஊக்கமானது
உள்ளம் சேர
உபகாரமானது
அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் – நானும்
இற்று போயிருப்பேன்
வெள்ளி, செப்டம்பர் 21
அறிவியல் கடவுள்
தேடு
உன்னிலும்
உலகின் பொருளிலும்
உள்ளது கடவுள்
தேடலில்
கிடைப்பது
பற்பல - அதில்
தேர்ந்தெடுப்பது அறிவியல்
நியூட்டனின் ஆப்பிள்
இயக்கவியலை
எளிதாய் விளக்கியது
ஆதாம் கடித்த
ஆப்பிள்
அற்புத கடவுளை
அளித்தது
கலிலீயோவின் தொலைநோக்கி
சந்திரனையும்
செவ்வாயையும்
ஆய்ந்தது
ஆன்மீகத்தை நோக்கின்
இராகு கேதுவை
தீண்டியது
இயற்கையை
இசைவாக்குது
அறிவியல்
இல்லாததை
எல்லையற்றதென
ஏமாற்றுவது
ஆன்மீகம்
அறிவின் துணை கொண்டு
அணுவை கண்டுபிடித்தால்
அதர்வண வேதத்தில்
அன்றே கண்டு பிடித்ததாக
அளப்பது ஆன்மீகம்
அடடா
அணுவின் மூலக்கூறை
அதர்வணத்தில் காட்டென்றால்
ஆழ்ந்து படியென அறிவுரை
கடவுள்
உலகை படைத்தார்
கடவுளை
யார் படைத்தார்
படைத்த உலகில்
பலபல கடவுள்
பதவியேற்றது
பாகப்பிரிவினையா
அப்படியெனில்
எத்தனை கடவுள்
எத்தனை உலகம்
யாராவது சொல்லுங்கள்
அறிவியில்
ஆய்வுக்குட்பட்டது
ஆன்மீகம் - அதில்
விலக்குப் பெற்றது
ஆய்வின் முடிவை
அரும் சூத்திரங்களாலும்
அதன் வேறுபாடுகளையும்
அறிவால் விளக்குவர்
ஏனென்ற கேள்வியில்
ஏற்றம் பெறும் அறிவியல்
ஏனென்றும் ஏதுவென்றால்
எல்லாம் அதுவென்று
பதிலற்றது ஆன்மீகம்
தவறிலிருந்தோ
தந்த பதில்களிலிருந்தோ
தேர்தெடுப்பது
அறிவியல்
அறிவியலை சோதிக்க
அறிவுடை மனிதருக்கு
அகிலத்தில் தடையேது
மதங்களை சோதிக்க
போப்பும், மவுல்வியும்
சங்கராச்சாரியும்
சரியென்பார்களா?
அறிவியல்
அனைவருக்குமானது
ஆன்மிகம்
அடிபணிவருக்கு மட்டும்
கணணியோ, கைப்பேசியோ
கண்டவரும் கையாளலாம்
கண்ணனை ராமனை
பாரதிய ஜனதா மட்டும்
பாதுகாக்கலாம்
இந்துவத்தின் அடிப்படை
அத்வைதம்
த்வைதம்
விசிஷ்டாத்வைதம்
ஆப்ரகாமின் வாரிசுகள்
இஸ்ரவேலர்
இயேசு கிறிஸ்து
முகமது நபி
மதங்களின்
முரண்பாடு
மனித இன வேறுபாடு
அறிவியல்
இதயத்தை அறுத்து
இன்னும் வாழ வைக்கும்
ஆன்மீகம்
மசூதியை இடிக்கும்
குஜராத்தை கொளுத்தும்
கடவுளின்
கடைக்கண் பார்வையின்றி
கண்டுபிடிப்புகள்
கனவிலுமில்லை
படைத்தவனே
படைத்தான்
பகடை நீ
பகர்ந்தது ஆன்மீகம்
அவனின்றி
அணுவுமில்லை
அவனால்தான்
அனைத்தும் படைக்கப்பட்டன
பாரவாயில்லை
பாவியனாலும்
அணுவைக் கொண்டே
அவனில்லாமல் செய்யலாமா?
திங்கள், செப்டம்பர் 17
சனி, செப்டம்பர் 15
திங்கள், செப்டம்பர் 3
5 கிலோ சர்ப் இலவசம்
ஓர் உண்மை நிகழ்ச்சி
மாலை ஒரு 4 மணி வாக்கில் 60 வயதுள்ள அவர் 2வது மாடியிலுள்ள தனது வீட்டு பலகனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்ற 30 வயது இளைஞன் கையை அசைத்து என்ன சார் சௌக்கியமா?
ஆங்...... நல்லா இருக்கிறேன்.
சார் நான் கொடுத்த அந்த புராடக்ட் நல்லா இருக்கா
ம்..........
மோட்டார் சைக்கிளை நிறுத்தி நேராக மாடி ஏறி சென்று விடுகிறான்.
அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை ட்யூஷன் படிக்கிறது
அதனிடம் சகஜமாக பேசுகிறான்.
சார் அந்த புராடக்ட்..........
எதுப்பா? வாட்டர் பில்ட்டர் அக்குவா கார்டா?
ஆமா சார் எப்படி வேலை செய்கிறது
நல்லா இருக்கு
சரி நீ எப்படி இருக்க?
சார் நான் இப்ப அந்த கம்பெனியில் இல்ல
சட்டென்று காலில் விழுகிறான்
என்னை ஆசிர்வாதம் செய்ங்க சார். இப்ப கோத்ரேஜ் கம்பெனியில் மேனேஜரா சேர்ந்திருக்கிறேன்.
எங்க வீட்டில வாஷிங் மிஷின் சரியா வேலை செய்ல
அப்படியா எங்க காமிங்க சார்.
எங்க கம்பெனியில் ஒரு ரோட் ஷோ அந்த பஸ் நிறுத்தம் அருகே போட்டிருக்கிறோம். BUY BACK OFFER ல உங்க பழைய மிஷன எடுத்துக்கிட்டு புது மிஷன் தருகிறோம். ரூ.7500 மட்டும்தான் 5 கிலோ சர்ப் இலவசம். மேலும் ரூ,2000 கொடுத்தா ஒரு கிராம் தங்க நாணயம் கொடுக்கிறோம் சார்.
சரி செக்கா தருகிறேன் இன்னிக்கே டெலிவரி கொடுத்துருவியா
இல்ல சார் மாத கடைசி ஆபர், பணமாதான் கொடுக்கணும்
என்கிட்ட பணம் இல்ல
பக்கத்துல்ல ஏ டி எம் ல எடுத்துக் கொடுங்க சார். 15 நிமிடத்தில மெஷின் டெலிவரி.
சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்குகிறார்
கீழ் வீட்டில் சற்று தள்ளி நின்றிருக்கும் மாமியின் அருகில் சென்று நலம் விசாரிக்கிறான் இளைஞன். அவர்களும் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.
தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஏ டி எம் அழைத்து செல்கிறான்.
பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ஒருவரை நிறுத்தி அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.
அடுத்த தெருவில் காலையில் ஒரு மிஷன் டெலிவரி செய்ததாக சொல்கிறான். வழியில் நிறுத்தி பேசிக் கொண்டிருந்தவரிடமும் சொல்கிறான் சார் உங்களுக்கு மிஷின் வேணுமென்றால் அடுத்த தெரு பஸ் நிறுத்தம் அருகே வரச் சொல்கிறான்.
சார் பணம் கொடுங்க ஒரு பத்து நிமிஷத்தில மிஷினோட வர்றேன். இவர் ரூ.7500 மட்டும் கொடுக்கிறார்.
சார் ஆபர்ல ரூ. 2000 கொடுத்தா ஒரு கிராம் தங்க நாணயம் தாராங்க . இன்றைய தங்க விலை ரூ.3000 சார். ஏதோ நினைத்துக் கொண்டு ரூ.2000 சேர்த்துக் கொடுக்கிறார்.
இதோ வந்திடுறேன் சார்........
15 நிமிடம்........
30 நிமிடம் ............ சே காலில் விழுது ஆசிர்வாதம் வாங்கியவன்
60 நிமிடம் அவன் சொன்ன அந்த பேரூந்து நிறுத்தம்.
விசாரிக்கிறார். அப்படியொரு ஷோ அன்று நடை பெறவே இல்லையாம்
வீட்டிற்கு ஓடி வருகிறார். டெலிபோன் டைரக்டரியில் கோத்ரேஜ் நெ தேடி தொடர்பு கொள்ள
அவர்கள் இதே போன்று நங்க நல்லூரில் ஒருவன் சிலநான் முன்பு ஏமாற்றினான். நீங்கள் ஜாக்கிரதையா இருக்க கூடாதா என்கிறார்கள்.
தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் செல்ல
சார் மோட்டார் சைக்கிள் நெ தெரியுமா? ஐடி கார்டு பார்த்தீங்களா
என்ன சார் .... எதுவுமே தெரியாதா
எப்படி கம்பிளையண்டு எழுதுறது. அந்த ஆள எங்கியாவது பார்த்த நீங்களே சொல்லுங்க சார்
விதியை நொந்து கொண்டு வந்து விட்டார்
இப்போது Hindu வில் Letter to Edit எழுதி கொண்டிருக்கிறார்
Mylapore Times க்கு அவருடைய சோதனையை எழுதி
மூத்த குடிகளே உஷார் என்கிறார்
இந்த சோகத்திற்கு சொந்தக்காரர் எனது பக்கத்து வீட்டுக்காரர்
எனவே ஆபத்தை நீங்களே விலைக் கொடுத்து வாங்காதீர்கள்
விழிப்புடன் இருங்கள்
குறும் படம் எடுக்கும் பதிவர்கள் இந் நிகழ்வை குறும் படமாக எடுத்து ஒரு விழிப்புணர்வை எல்லோரிடமும் எடுத்து செல்லுங்களேன்.
செவ்வாய், ஆகஸ்ட் 28
மாலதியின் சிந்தனைகள்
[வேல்வெற்றியின்] மண்சோறுண்டால் குழந்தை ஐப் பற்றிய புதிய கருத்துரை.
6 messages
மாலதி <thmalathi@gmail.com>
|
Tue, Jul 31, 2012
at 3:25 PM
|
To: selvel.murugan@gmail.com
|
|
மிகசிறந்த அறிவியலை முட்டாள்தனமான
ஆன்மீகமாக்கி அவலப்
படுத்துகிறார்கள் ஆண்மைக்
குறைபாடு இருப்பவன்
தான் மனைவிக்கு
இன்னொரு திருமணம்
செய்து வைப்பானா? வினா
எழுகிறது விடைதான்
கிடைப்பதில்லை ? இந்த
போலி குமுகத்திலிருந்து மண் சோறு
உண்ணும் முறையில்
பெண்களின் கருப்பையின்
குற்றம் விலகுகிறது
பின்னர் குழந்தைப்
பேறு உண்டாகிறது
இந்த அறிவியல்
தெரியமையம் பக்தியாகி
விட்டது .
|
vel Murugan <selvel.murugan@gmail.com>
|
Wed, Aug 8, 2012
at 12:18 PM
|
To: மாலதி <thmalathi@gmail.com>
|
|
வணக்கம்,
தங்கள்
பதில் மண்சோறு
உண்டால் குழந்தை
பாக்கியம் கிட்டம்
என்ற தொனி
தெரிகிறது. மண்ணில்
சோறிட்டு உண்பது
அறிவியலா என தெரியவில்லை.
என்
கேள்வி தவறாக
இருந்தாலும் விளக்கமளிக்கவும்
நன்றி
வேல்முருகன்
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
Mala Thi <thmalathi@gmail.com>
|
Thu, Aug 16, 2012
at 2:51 PM
|
To: vel Murugan
<selvel.murugan@gmail.com>
|
|
வணக்கம் மண்சோறு உண்டால் குழந்தை கிடைக்குமா
இது அறிவியலா? என்ற
உங்களின் வினா
உண்மையில் பாராட்டக் கூடியதே
. மான் சோறு
என்பது தெருவில் கொட்டிக்
கிடக்கும் மண்ணிலும்
சகதியிலும் சோற்றைக் கொட்டி
உணவை உண்ணுவதில்லை
. தூய்மையாக்கப் பட்ட
கல்லில் அல்லது தரையில் சோற்றைக் கொட்டி அதை
கையை பின்புறமாக
கட்டிக் கொண்டு பெண்கள்
உணவு உன்ன
கருப்பையில் உள்ளகுற்டங்கள்
விலகி குழந்தைப்
பேறு உண்டாகிறது
. புரிதலுக்கு நன்றி
மாலதி .
[Quoted text hidden]
|
vel
Murugan <selvel.murugan@gmail.com>
|
Thu, Aug 16, 2012 at 3:28 PM
|
To:
Mala Thi <thmalathi@gmail.com>
|
|
வணக்கம்
தங்கள் கருத்தில்
எனக்கு உடன்பாடில்லை. எங்கள் தாத்தா
பாட்டிகள் மண்
கலயத்தில்தான் உணவு
உண்டனர். பனை மட்டையும், தேங்காய்
சிரட்டையும்தான்
கரண்டிகள், நான்தான் எவர்சில்வர்
தட்டில் சாப்பிடுகிறேன்.
நானும் தெருவில்
கொட்டிக் கிடக்கும்
மண் என்று
சொல்லவில்லை.
பிள்ளை பேறு
கிடைக்க, கருப்பை குற்றஙகள்
விலக தூய
தரையில் உணவுண்டால்
போதுமா
அப்படியென்றால் பெண்ணென்ன
அத்தனை ஆணும்
கூட தினமும்
மண்சோறுண்ண தயாராக
இருப்பான். ஆணுக்கும் அது
ஒரு கவலைதான்.
நீங்களே ஓரிடத்தில்
ஆணுக்கும் குறையிருக்க
வாய்ப்புண்டு என்று
சொல்லியுள்ளீர்கள். உண்மையேதான்.
அப்படியிருக்க மண்சோறு
மகத்துவம் அளிக்குமா?
குறைக்குத்தான் நிவர்த்தி
தேடவேண்டும்.
எனது நீண்ட
பதிலுக்கு காரணம், தங்களை
எழுத்து வீச்சு. அது
அவநம்பிக்கையை
தகர்க்க வேண்டும்
வளர்க்க கூடாது
என்ற எண்ணத்தில்
இது உளவியல்
சம்பந்தப்பட்டது என்பதால்
இது போன்ற
நம்பிக்கைகள் இருக்கதான்
செய்கிறது. ஆயினும் ,,,,
இயற்கையை மீறி
பார்ப்போம் இல்லையெனில்
அமைதியாக இருப்போம்
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
Mala Thi <thmalathi@gmail.com>
|
Fri, Aug 17, 2012
at 3:21 PM
|
To: vel Murugan
<selvel.murugan@gmail.com>
|
|
அண்ணன் சீமான் ஒரு
இடத்தில் சொல்லுவார்
நான் செத்துதான் என்
உண்மையை நிலைநிறுத்த வேண்டுமெனில் அது
என்னால் இயலாது என்பார்
. நான் சொல்லுவது
அறிவியல் அடிப்படையிலானது இது ஒக
இருக்கையில் ஒரு
பகுதிதான் வியக்கனம் தேவையில்லாத விமர்சனம்
தேவைதான் ஆனால் முரட்டுத்தனமான விமர்சனம் பொருளற்றது தன்னிலை
விளக்கம் உங்களுக்கு
மட்டுமே விளக்கமா
அளிக்கிறேன் . இது
அறிவியல் சித்த
மருத்துவ அறிவியல் ஒக இருக்கை(யோகாசனம் )அறிவியல்
வேண்டுமானால் நல்ல
யோகாசன ஆசானை சந்திக்கவும்
.
நன்றி
.
மாலதி
[Quoted text hidden]
|
vel Murugan <selvel.murugan@gmail.com>
|
Sat, Aug 18, 2012
at 11:37 AM
|
To: Mala Thi <thmalathi@gmail.com>
|
|
பொறுத்தமற்ற விளக்கம் . மண்சோறுக்கும் யோகசனத்திற்கும் தொடர்பில்லை,
முரட்டு
விவாதத்தை மேற்கொண்டு
தொடரவில்லை,
நன்றி
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
மேற்கண்ட விவாதத்திற்கு பதில்தான் பதிவர் எழுதிய பாராட்டு பத்திரம் இங்கே http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html
அறிவியலை
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம்
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம்
மண்சோறு உண்ணாமல் கோட்டை விட்டு
மகவு வேண்டி மருத்துவமனையில் (fertility clinic) காத்திருக்கின்றனர் மக்கள் கூட்டம் என்கிறார்
சான்றைத் தேடி
அறிவியலை பரப்புரை
செய் .
அறிவியலை பரப்புரை
செய் .
மண்சோறு உண்டு மகவு பெற்றவர் பட்டியல் அடுத்த பதிவாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் காட்டுமிராண்டி
பெரியார் ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும்
பெரியார் ஒரு மிகச் சிறந்த சீர்திருத்தவாதி, அவர் இல்லையென்றால் தமிழகம் இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கும். அவர் எந்த தமிழனை இழிவு படுத்தினார்.......... பட்டியல் வாசிப்பது யாரென்று பாருங்கள் மக்களே......
தமிழன் முடமானானாம், எழுந்து நின்று இவர்கள் சரி செய்தவற்றை பட்டியலிடட்டும்.
பெண் கல்வி, பெண் விடுதலை, விதவை மறுமணம் கோயில் நுழைவு போராட்டம், சமூக விடுதலை, மனிதனை மனிதனாக மதித்தல் இவையெல்லாம் பெரியாரின் பங்கு இல்லை என சொல்லட்டும்
சிந்திப்பாய்
தமிழனே .
தமிழனே .
பெரியார் சொல்வார், இந்த இராமசாமி சொல்கிறான் என்று யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சிந்தியுங்கள் சரியில்லையென்றால் எனென்று கேள்வி கேளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்பார்.
கேள்வி கேட்டால் நாம் காட்டுமிராண்டி
நல்லது
திரும்பவும் இதை படியுங்கள் http://velvetri.blogspot.in/2012/07/blog-post.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
பணம் புகழுக்கு பகீரத பிரயத்தனம் பலகாலம் நிலைத்திருக்குமோ? ஆண்டாண்டு கால அதிகாரம் அப்படியே அடுத்த தலைமுறை தொடரவா? இழப்பதற்கு துணிவில்லை இறப...
-
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...
-
ஷாஜகான் கட்டியக் கல்லறையா சகலரும் எண்ணும் இதய வடிவமா? கட்டி அணைத்து கனன்ற வெப்பத்தை கட்டிலில் தணித்து தொட்டிலில் தாலாட்டுவதா? கணையாழி அணிவித...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...